தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு…துப்பாக்கி சூட்டிற்கு தாசில்தார்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை..

தூத்துக்குடி மக்களை ஏமாற்றிய அதிமுக அரசு

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட 100 நாள் நடந்த போரட்டத்தில், போலீசார் நடத்தி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 28.5.18ல் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது போல், அரசாணை வெளியிடப்பட்டது..

 மாசுக்கட்டுப்பாடு துறையின் செயலாளர் முகமது.நசீமுத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரமே கிடையாது.. ஸ்டெர்லைட் ஆலை 1998,2010,2013, ஆகிய ஆண்டுகளில் மூடப்பட்டது. 2013ல் ஸ்டெர்லைட் ஆலை  இயங்குவது  தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. தொழில்துறையின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கொடுத்து, கொள்கை ரீதியாக முடிவெடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியும். இதற்கு குறைந்தது ஆறு மாத காலமாகும்.

 தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உடனடியாக அரசாணை வெளியிட முடியாது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஞானதேசிகனை உடனடியாக மாற்ற முயற்சி நடக்கிறது.

 முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும், தூத்துக்குடி மக்களை ஏமாற்றுவதற்காக மாசுக்கட்டுப்பாடுத்துறை செயலாளர் முகமது. நசீமுத்தின் மூலம் அரசாணை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை…

  தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டிற்கு, தாசில்தார் சந்திரன், துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர் மூவரும் ஒப்புதல் கொடுக்கவில்லை.. தூத்துக்குடியில் கலவரம் நடந்ததது தொடர்பான, காவல்துறையின் குறிப்புக் கோப்பில் மூன்று தாசில்தார்களும் கையெழுத்து போட்டு உள்ளார்கள்.. துப்பாக்கி சூடு நடத்த ஒப்புதல் அளித்ததாக, மூன்று தாசில்தார்கள், தங்கள் கைப்பட எழுதி கொடுக்க வேண்டும்.. அப்படிப்பட்ட ஒப்புதல் கடிதம் மூன்று தாசில்தார்களும் கொடுக்கவில்லை.

  துப்பாக்கி சூட்டிற்கு நாங்கள் ஒப்புதல் கொடுக்கவில்லை என்று மாவட்ட வருவாய் அதிகாரிக்கு எழுத்து மூலம் கூறியுள்ளார்கள்…

 தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ், டிஜிபி ஆகியோர், துப்பாக்கி சூடு என்ற தவறை மறைக்க, தொடர்ந்து தப்பு செய்துக்கொண்டே இருக்கிறார்கள்…

  தூத்துக்குடி மக்களை  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஏமாற்றி வருகிறது என்பது தான் உண்மை…

Comments

comments