தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு-சிபிஐ விசாரணை தேவை

தாசில்தார்களிடம் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேசிய மர்மம் என்ன..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக 22.5.18ம் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 200க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தார்கள்..

சென்னை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி கலவரம் – துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என்று கேள்வியை எழுப்பி உள்ளது. டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அபிடவிட்டில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணியாற்றிய 277 ஊழியர்கள் காப்பற்றவே துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்பட்டுள்ளது..

நமக்கு எழுந்த சந்தேகங்களுக்கு சிபிஐ விசாரணையில் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று நினைப்பதில் தவறில்லை.

  1. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், ரிக்கார்டு அறையில் தினக்கூலி பணியாற்றும் செல்வசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடந்த சில சம்பவங்களை செல்போன் படம் எடுத்தார் என்பதற்காக செல்வசேகர் அடித்து கொல்லப்பட்டார்.
  2. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றும் ஒருவர் சில சம்பவங்களை செல்போனில் படம் எடுத்தார், அதனால் போலீசாரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.
  3. ஜூன் 6ம் தேதி துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்த தாசில்தார் சந்திரன், துணை தாசில்தார்கள் கண்ணன், சேகர் மூவரின் செல்போன் எண்களை, சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்று, மூவரையும் செல்போனில் தொடர்புக்கொண்டு, தேசிய மனித உரிமை ஆணையம், ஒய்வு பெற்ற நீதிபதி ஆணையத்திடம் எதுவும் உளற வேண்டாம். உங்களை நாங்கள் காப்பாற்றுவோம் என்று திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவரும், சரத்குமார் கட்சியில் முக்கிய நிர்வாகியாக பொறுப்பு வகித்தவருமான ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேசிய பின்னணி என்ன?
  4. திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான், ஆலடிப்பட்டியில் செயல்பட்டு வரும் RURAL EDUCATIONAL and SOCIAL WELFARE TRUST(Rest) நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கே.ரமேஷ் ஆப்ரகாம், 26.4.18 அன்று தூத்துக்குடியில் உள்ள திலகவதியுடன் ரூ60கோடி, மருத்துவமனை கட்டுமான பணி என்ற பெயரில் கொடுப்பதாக ரூ100/- மதிப்புள்ள பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளார். இந்த ஒப்பந்தத்தில் சாட்சிகளாக டி.குமார் மற்றும் மோகன் இருவரும் கையெழுத்து போட்டு உள்ளார்கள். RURAL EDUCATIONAL and SOCIAL WELFARE TRUST(Rest) வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்று, தூத்துக்குடியில் உள்ள பெண் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்திற்கு பயன்படுத்தியிருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணையே நடைபெறவில்லை.
  1. கலவரத்தில் காயமடைந்த காவலர்களில் 65 பேருக்கு மிகவும் லேசான காயம், 7 காவலருக்கு மட்டுமே படுகாயமடைந்தார்கள்..காயமடைந்த உண்மை பட்டியலை வெளியிடுவார்களா?
  2. ஆவடியில் ஆறு கைத்துப்பாக்கி குண்டுகள் வாங்கி சென்றார்கள் எதற்கு?

இப்படி பல சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதற்கு சிபிஐ விசாரணையில் பதில் கிடைக்கும்…

 

Comments

comments