தூத்துக்குடி கலவரம் –துப்பாக்கி சூடு… காலா படம் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நாடகம்..

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ1000 உதவித்  தொகை கொடுக்க கூட வக்கில்லையா?

தூத்துக்குடியில் நடந்த கலவரம், துப்பாக்கி சூட்டை கண்டித்து,  தமிழர் கலை இலக்கிய கூட்டமைப்பு சார்பில் 26.5.18 அன்று சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலா படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதமாவதை கண்டித்து, ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், முற்றுகை போராட்டம் நடந்தது.  தமிழ்நாட்டின் நலன் தொடர்பாக எந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாத இயக்குநர் பா.ரஞ்சித், தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூடு கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நோக்கம் என்ன… எல்லாம் நாடகம் தான்…

   காலா படம் சுமார் ரூ100 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டு, ஜூன் மாதம் வெளியாகிறது. காலா படம் வெளியாகுவதற்கு எந்த பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டார்.

 காலா படத்தின் தயாரிப்பாளர் சார்பில் அல்லது காலா படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்த குடும்பங்களுக்கு  ரூபத்து இலட்சம் வேண்டாம்…ரூஒரு இலட்சம் வேண்டாம்… கேவலம் ரூ1000 உதவித் தொகையை காலா பட இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்து இருந்தால் கூட  பாரட்டியிருக்கலாம்..ரூ1000 உதவித் தொகை கொடுக்க கூட வக்கில்லை போலிருக்கு..

 காலா படம் வெளியாகும் போது எதிர்ப்பு வராமல் இருக்க, தூத்துக்குடி கலவரம், துப்பாக்கி சூட்டை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டு மெகா நாடகத்தை பா.ரஞ்சித் அரங்கேற்றியுள்ளார்.

  தமிழ்நாட்டை பற்றி கவலைப்படாமல், காலா படம் வெளியாகும் போது பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் கூட போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்களை நினைக்கும் போது, பரிதாபமாக இருக்கிறது…

 

 

                             

 

Comments

comments