தூத்துக்குடி கலவரம்- துப்பாக்கி சூடு..பின்னணியில் வெளிநாட்டிலிருந்து நிதி !!

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் என்று 100 நாட்கள் போராட்டம் நடந்தது. 100வது நாள் போராட்டம்  22.5.18ம் தேதி 20,000க்கு அதிகமான  மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போது, வி.வி.டி சிக்னலிருந்து போலீசாருக்கும், மக்களுக்கு மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.

  கலவரத்தை கட்டுப்படுத்த, கண்ணீர் புகை குண்டு, தண்ணீரை பீச்சி அடித்தல் போன்ற வழி முறைகளை போலீசார் பயன்படுத்தாமல் துப்பாக்கி சூடு நடத்தியதால் 13 பேர் பலியானார்கள்..  பலியானவர்கள்  மற்றும் படுகாயமடைந்த 200 பேரின் புகைப்படங்களை பார்த்தவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியவில்லை.

   திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டான், ஆலடிப்பட்டியில் செயல்பட்டு வரும் RURAL EDUCATIONAL and SOCIAL WELFARE TRUST(Rest) நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் கே.ரமேஷ் ஆப்ரகாம், 26.4.18 அன்று தூத்துக்குடியில் உள்ள W.திலகவதியுடன் தூத்துக்குடியில் புதிய மருத்துவமனை கட்ட ரூ60கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே போல் ஒப்பந்தம் நான்கு போடப்பட்டுள்ளதாக தகவல். மருத்துவமனைக்கு கட்டுவதற்கான ஒப்பந்தம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்கான நிதி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  இந்த ரூ60 கோடி நிதி RURAL EDUCATIONAL and SOCIAL WELFARE TRUST(Rest) வெளிநாட்டிலிருந்து பெற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு எதிரான போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு இருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலையுடன் தாமிரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் போட்டி போடும் ஒரு நிறுவனத்துடன் நெருக்கமாகவும், பங்குதாரராகவும் உள்ள முக்கிய நபர் மூலம் இந்த பண பரிவர்த்தனை நடந்ததாக தெரிகிறது.

 இது தொடர்பாக மக்கள்செய்திமையம் மத்திய அரசின் உள்துறை செயலாளர், தமிழக ஆளுநர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பி உள்ளோம்.

  மக்கள்செய்திமையத்திடம் இருந்த ஆதாரங்களை வெளியிட்டு விட்டோம்.. இனி இந்த ஆதாரங்களில் உள்ளது உண்மையா  என்று தமிழக காவல்துறை அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Comments

comments