தூத்துக்குடி கலவரம்…போலீஸ் தாக்கியதால் பாரத்ராஜா பலிபாரத்ராஜா பரோல் கைதி…

தூத்துக்குடி மகழ்ச்சிபுரத்தை சேர்ந்த யோசுநாதன் மகன் பாரத்ராஜா, தண்டனை கைதியாக பாளையங்கோட்டையில் சிறையில் இருக்கிறார். உறவினர் திருமணத்துக்காக 17.5.18 முதல் ஏழு நாட்களுக்கு பரோலில் வீட்டுக்கு வருகிறார்..  23ம் தேதி காலை பாரத்ராஜா, செளந்தர் இருவரையும் போலீசார் தென்பாகம் காவல் நிலையம் அழைத்து சென்று தாக்குகிறார்கள்.. அப்போது பாரத்ராஜா நான் பரோலில் வந்து உள்ளேன். எனக்கு போராட்டத்துக்கு சம்பந்தம் கிடையாது என்று கதறுகிறார்.. தென் பாகம் காவல் நிலையத்திலிருந்து, போலீஸ் பயிற்சி பள்ளிக்கு அழைத்து, சென்று அங்கும் தாக்கப்படுகிறார்கள்.

 பாரத்ராஜா 24.5.18 மதியம் 3மணியளவில்  கலவர வழக்கில் கைது தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில், ஆஜர்ப்படுத்தப்படுகிறார். அப்போது நான் பரோல் கைதி, நான் கலவரத்துக்கும் எனக்கு சம்பந்தம் கிடையாது, என்னை போலீசார் கண்மூடித்தனமாக அடித்தார்கள் என்று சட்டையை கழட்டி காட்டுகிறார்..

  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய செளந்தர் உள்ளிட்ட அனைவரையும், ஜாமீன் கொடுத்த, நீதிபதி பரோல் கைதி என்பதால் பாரத்ராஜாவை போலீஸ் பயிற்சிப்பள்ளியில் உள்ள சிறையில் அடைக்கப்படுகிறார். நீதிபதி முன்பு போலீசார் அடித்ததாக எப்படி சொல்லலாம் என்று அடித்துள்ளார்கள்..

 பாளையங்கோட்டை சிறை கண்காணிப்பாளர், சிறையிலிருந்து காவலர்களை அனுப்பி, பாரத்ராஜாவை சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.. சிறையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. பாரத்ராஜாவின் உறவினர்களுக்கு, 30.5.18 அன்று பாரத்ராஜா இறந்துவிட்டதாக போன் வருகிறது…

  பரோலில் வந்த பாரத்ராஜாவை கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசார் கடுமையாக  தாக்கியதால்  சிறைக்கு சென்றவுடன் இறந்துவிட்டார் என்று உறவினர்கள் கூறுகிறார்கள்…

 தூத்துக்குடி கலவரத்தில் தினமும் அதிர்ச்சியான செய்தி வந்துக் கொண்டு இருப்பது, தமிழக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது…

 

 

 

Comments

comments