தூத்துக்குடி கலவரத்தை மறைக்க..ஜெயலலிதா சாப்பிடும் உணவு பரிசோதனை விலை போகும் பத்திரிகை ஜனநாயகம்…

தூத்துக்குடி கலவரத்தில், திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள்.. 17 வயது மாணவியை இரண்டு கைகளையும் போலீஸ்காரர்கள் பிடித்துக்கொள்ள, ஆய்வாளர் ஒருவர் வாயில் துப்பாக்கியை  நுழைத்து சுட்டு கொன்றார். இதையெல்லாம் விசாரித்து வெளியிடாத டிவி மீடியாக்கள், ஊடகங்கள் ஜெயலலிதா பேசிய ஆடியோ, உணவு பட்டியலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட தூத்துக்குடி கலவர செய்தியை ஒரங்கட்டிவிட்டு, ஜெயலலிதா செய்தியை வெளியிட்டு, ஒவ்வொரு டி.வியும் தங்கள் டி.ஆர்.பி ரேட்டை உயர்த்தியுள்ளா்கள்.. இது தான் பத்திரிகை ஜனநாயகமா…

  ஜெயலலிதா சாப்பிடும் உணவுகள் ஜனவரி 2016 முதல் தடய அறிவியல் துறையில் தினமும் அனைத்து வேளை உணவுகளும் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி 1.9.16 முதல் 22.9.16 வரை முதல்வர் ஜெயலலிதா சாப்பிடும் உணவை பரிசோதித்த[ஆய்வு] விவரங்கள் நாள் வாரியாக அளிக்கவும் என்று கேட்டோம்..

 உண்மையில் ஜெயலலிதா உணவு பரிசோதிக்கப்படவில்லை என்றால் பரிசோதனை செய்யவில்லை என்று இரண்டு வார்த்தைகளில் தடய அறிவியல் துறையின் நஞ்சியல் பிரிவு   துணை இயக்குநர் தே.பாஸ்கர் தகவல் அளித்திருக்கலாம்..

 ஆனால்  நஞ்சியல் பிரிவுதுணை இயக்குநர் தே.பாஸ்கர், எந்தத் தகவலை வெளிப்படுத்துவது, ஒரு நபரின் உயிருக்கு அல்லது உடலின் பாதுகாப்பிற்காக அல்லது பாதுகாப்பு நோக்கத்திற்காக மந்தணமாக அளிக்கப்பட்ட தகவலின் அல்லது உதவியின் ஆதாரங்களை இனங்காட்டக் கூடுமோஅந்த தகவல் அளிப்பதிலிருந்து விலக்களிப்பு செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளித்துள்ளார்.

தடய அறிவியல் துறையின் நஞ்சியல் பிரிவு துணை இயக்குநர் தே.பாஸ்கர், ஜெயலலிதா தினமும் சாப்பிடும் அனைத்து வேளை உணவுகளும் சோதனை செய்யப்படுகின்றது என்பதை ஒத்துக்கொண்டுள்ளார் என்பது உறுதியாகிறது…

 2011 மே மாதம் முதல் முதல்வராக இருக்கும் ஜெயலலிதா சாப்பிடும் உணவை பரிசோதனை செய்யாமல், ஜனவரி 2016 முதல் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன?

  மக்கள்செய்திமையம் ஆறுமுகசாமி ஆணையத்தில் கொடுத்த மனுவில் ஜெயலலிதா உணவு பரிசோதனை செய்யும் விவரங்கள் கூறப்பட்டும் , ஆணையம்  இன்று வரை விசாரிக்கவில்லை…

  ஜெயலலிதா உணவு பரிசோதனை செய்யப்பட்டதற்கு அதிகாரிகள் பதில் சொல்லுவார்களா?

                              

Comments

comments