தூத்துக்குடி – அமைச்சர் கடம்பூர் ராஜூ கமிசன் வாங்குகிறார்… தளவாய் சுந்தரம் அதிமுகவை அழிக்கிறார்…மாஜி அமைச்சர் சண்முகநாதன் பேட்டி..

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ  சண்முகநாதன்  பத்திரிகையாளர்களை சந்திப்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், தற்போது அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சின்னதுரை மூவருக்கும் கட்சிக்கும் சம்பந்தம் கிடையாது.. மூவருக்கு கட்சியில் பதவி வாங்குவது கமிசன் வாங்குவதுதான் தொழில்..

 கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினரை  எதிர்த்து, அதிமுகவினரை நிறுத்துகிறார். புதுக்கோட்டை கூட்டுறவு சொசைட்டியில் கிளை கழக செயலாளர் முருகன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒன்றிய செயலாளரை நிறுத்துகிறார்கள்..முருகன் வெற்றி பெற்றார். முருகன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுக்கு போய் உள்ளார்கள்.. 

 அதிமுக நகர செயலாளர் ஏசாதுரை மேலூர் கூட்டுறவு வங்கி தேர்தலில் நிற்கிறார். அவரை தோற்கடிக்க முயற்சி நடக்கிறது.. 61 பேர் மனு போட்டார்கள்.. 23 மனு நிராகரிக்கப்பட்டது. ஏசாதுரை உடன் இரண்டு மனுக்களை ஏற்றுக்கொண்டு, மற்ற மனுக்களை நிராகரித்துவிட்டார்கள்.. என்ன காரணம்…. ஏற்கனவே இயக்குநராக இருந்த இலக்கிய அணி நடராசன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது..எப்படி…கட்சிகாரர்கள் மனுவை, மூவர் அணி நிராகரித்து, கடம்பூர்  ராஜூ தலைமையில் மூவர் அணியுடன், தளவாய் சுந்தரமும் கூட்டணி அமைத்து கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடு செய்து வருகிறார்கள்..

அதிமுக வேட்பாளருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தி, அதிமுகவை கடம்பூர் ராஜூ, செல்லப்பாண்டியன், சின்னதுரை மூவரும் அழித்து வருகிறார்கள்..தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மூன்று மாவட்டத்திலும் அதிமுகவை அழித்துவிட்டார்கள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தளவாய் சுந்தரம் பேச்சை கேட்டு கட்சி அழிக்கிறார்.. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன் பேச்சை கேட்டு கட்சியை அழிக்கிறார்…ஆட்சி நல்லா நடக்கிறது. ஆனால் அதிமுக தூத்துக்குடி மாவட்டத்தில் அழிந்துவிட்டது..

கூட்டுறவு சங்கத் தேர்தலில் அதிமுகவினருக்கு எதிராக கமிசன் வாங்கிக்கொண்டு மூவர் அணி அதிமுகவினரை நிறுத்தி அதிமுகவின் தொண்டனை தோற்கடித்து வருகிறார்கள்..மூன்று பேருக்கு துணையாக இருப்பது தளவாய் சுந்தரம். ஏற்கனவே தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் கட்சி அழித்துவிட்டார். தற்போது தூத்துக்குடியில் கட்சி அழிக்க வந்துள்ளார்…

திங்கள் கிழமைக்குள், கட்சியின் தலைமை கூட்டுறவு சங்கத் தேர்தலில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று பேட்டி அளித்தார்..

 சண்முகநாதன் எம்.எல்.ஏ பேட்டி வெளியானவுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் அதிர்ச்சியடைந்தார்கள்.. சண்முகநாதனை சமாதானம் செய்யு முயற்சி நடந்து வருகிறது..

  மாஜி அமைச்சர் சண்முகநாதன், திங்கள் கிழமைக்குள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள்  நல்ல முடிவெடுக்காவிட்டால், வேறு முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது…

Comments

comments