துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்- தலைமைச் செயலகத்தில் யாகம்-அமைச்சர் பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு மனு…

தமிழக அரசின் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், சென்னை தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர் அறையில்  20.1.19ம் தேதி விடியற்காலை 3.30மணிக்கு  சிறப்பு யாகம் நடத்தினார். விடியற்காலை 3.30 மணிக்கு ஒ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கலந்து கொள்ள யாகம் தொடங்கியது.

 காலை 6.45மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, தலைமைச்செயலகத்திற்கு 7.10மணிக்கு வந்தார். பட்டுவேட்டியுடன் யாகத்தில் கலந்துக்கொண்டார். 8.15க்கு யாகம் முடிந்தது. யாகம் நடத்திய அர்ச்சர்களுக்கு பண முடிப்பு கொடுத்து, ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் புறப்பட்டார்.

  காலை 10மணியளவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் யாகம் நடத்திய செய்தி வெளியானதும், அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்..

 ஒ.பன்னீர்செல்வம், கொடநாடு கொள்ளை, கொலை விவகாரத்தில் காப்பாற்றிய சயனுக்கு நன்றி தெரிவித்தும், நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடப்பாடி தலைமையிலான அரசுக்கு எதிராக ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 ஆதரவு எம்.எல்.ஏக்கள் வாக்களித்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு எதிராக வந்துவிடக்கூடாது மற்றும் இணைப்பு ஒப்பந்தத்தின் படி முதல்வர் பதவி கிடைக்க  உள்ளிட்ட ஐந்து அம்சங்களின் பேரில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. 11 அர்ச்சர்கள் ஒ.பன்னீர்செல்வம் அறையில் சிறப்பு யாகத்தை நடத்தினார்கள்..

  The Indian Constitution was amended by 42nd Constitutional Amenedment Act, 1976 by which an Article 51A was inserted making provisions for the Fundamental Duties prescribed for citizens of India.

  Section V of our Constitution, Article 51A on ‘Fundamental Duties’ begins by saying: “It shall be the duty of every citizen of India…”. In the enumeration of such duties, sub-clause (h) says: “To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform”.

 துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் அவர்களுக்கு மக்கள்செய்திமையம் மனு அனுப்பி உள்ளது..

 

 

Comments

comments