திருவேற்காடு நகராட்சி கோடீஸ்வரர் பட்டியலில் சாமுவேல் குணசுந்தரியை சிக்க வைத்த சாமுவேல்..

திருவேற்காடு நகராட்சியில் என்ன நடக்கிறது என்று ஒண்ணுமே புரியவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஆக்ரமிக்கப்பட்ட அரசு நிலங்களை கைப்பற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.  அய்யனம்ப்பாக்கம் கருமாரியம்மன் நகர், வெல்பர் பள்ளி சாலையில்  மேய்க்கால் புறம்போக்கு, சுடுகாடு ஆக்ரமிப்புக்கு போலி சர்வே எண்ணை ஏற்படுத்தி, அப்ரூவல் கொடுக்கப்பட்டுள்ளது. அப்ருவலை ரத்து செய்ய, சி.எம்.டி.ஏ உத்தரவிட்டு, நகராட்சி நிர்வாகம் அப்ரூவலை ரத்து செய்யவில்லை..

 பூந்தமல்லி நகராட்சியில் சுகாதாரப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி சாமுவேல் பல லட்சம் போலி பில் போட்ட இலட்சாதிபதி பட்டியலில் இடம் பெற்றார். திருவேற்காடு நகராட்சிக்கு மாறுதல் பெற்று போன பிறகு கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெற்றுவிட்டார். மதுரவாயில் உள்ள சாமுவேல் வீட்டின் மதிப்பு ரூ10கோடியை தாண்டும்.

 மதுரவாயல் மூன்றாம் நிலை நகராட்சியில் ஆணையராக குணசுந்தரி பணியாற்றி போது, மேஸ்திரியாக சாமுவேல் பணியாற்றினார். குணசுந்தரி மீன் குழம்பு, ரசம் சமைத்து கொடுத்து, விசுவாசியாகி வலம் வந்தார். கன மழையில் கூவம் ஆறு ஆக்ரமிப்பால், ஏ.சி.சண்முகம் கல்லூரி மூழ்கியது. அப்போது ரூ3கோடிக்கு போலி பில் போட்டு, சாமுவேல் சுருட்டினார். நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ், வி.கே.சண்முகம் இருவரும் திருநாவுக்கரசை பொறுப்பு ஆணையராக நியமித்து போலி பில் ஊழல் விசாரணை நடந்தது. சாமுவேல், உள்ளூர் கட்சியினர் மூலம் திருநாவுக்கரசை மிரட்டினார். திருநாவுக்கரசு நிரஞ்சன் மார்டியிடம் புகார் கொடுக்க, சிறப்பு தணிக்கை செய்யப்பட்டது. மதுரவாயல் நகராட்சியில் குணசுந்தரி, சாமுவேல் இருவரும் ரூ1.80கோடிக்கு போலி பில் போட்டது நிருபணமானது. குணசுந்தரி கோவைக்கும், சாமுவேல் திருத்தணிக்கும் மாற்றப்பட்டார்கள். சாமுவேலை தற்காலிக பணி நீக்கம் செய்ய, உத்தரவிட்ட போது, திருநாவுக்கரசு காலில் சாமுவேல் குடும்பத்துடன் விழுந்து, தன்னை காப்பாற்றிக்கொண்டார்..

  ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருக்கும் தண்டபாணி, நகராட்சி நிர்வாகத்துறையில் கூடுதல் இயக்குநராக இருந்த போது, அவர்  காலில் விழுந்து, குணசுந்தரிக்கு எதிராக அப்ரூவராக மாறி, தன் மீது குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்து, சுகாதாரத்துறை ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார் சாமுவேல்..

 சாமுவேல் இலஞ்சம் வாங்கிய பணத்தை வைத்து, மதப்பிரச்சாரம், டிரஸ்ட் என்று தொடங்கி அரசு ஊழியர் என்பதை மறந்து, மதம் சார்ந்த அரசியல்வாதியாக வலம் வருகிறார் சாமுவேல்..

 குணசுந்தரிக்கு மீன் குழம்பு சமைத்து கொடுத்து, விசுவாசமாக இருப்பது போல் நடித்த சாமுவேல், ரூ1.80கோடி போலி பில் ஊழலில் குணசுந்தரிக்கு எதிராக அப்ருவராகி காட்டி கொடுத்தார்.

 தற்போது, திருவேற்காடு நகராட்சி ஆணையர் நான் மாறுதலாகி போய்விடுவேன் என்று திருவேற்காடு கோயில் கூறிய போது, அம்மா நீங்க மாறி போன தீக்குளித்துவிடுவேன் என்று அழுதுக்கொண்டெ நடித்தார் சாமுவேல்.

 குணசுந்தரிக்கு எதிராக அப்ரூவராகி காட்டி கொடுத்தது போல், திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு எதிராக அப்வருராகி சிக்க வைத்துவிடுவார் என்று சாமுவேலைப்பற்றி தெரிந்தவர்கள் புலம்புகிறார்கள்..

Comments

comments