திருவேற்காடு நகராட்சி – சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ஊழல்

திருவேற்காடு நகராட்சியில் ஆணையர் பொறுப்பில் இருந்த பொறியாளர் சங்கர் இருந்த போது, கோடிக்கணக்கில் மோசடி பில் போடப்பட்டுள்ளது. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் பொறியாளர் சங்கர்..

   திருவேற்காடு நகராட்சியில் 2014ம் ஆண்டு முதல் மாதா, மாதம் சன் வியூ எண்டர்பிரைசஸ்  பெயரில் நகராட்சி பகுதியில் தெரு விளக்கு பராமரித்தல் பணி பெயரில் போடப்பட்ட போலி பில்…

   வவுச்சர் எண்.96/6.6.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில்  ரூ5,98,696/-   

  1. வவுச்சர் எண்.152/12.7.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  2. வவுச்சர் எண்.203/6.8.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  3. வவுச்சர் எண்.254/3.9.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  4. வவுச்சர் எண். 317/8.10.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  5. வவுச்சர் எண். 382/29.10.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ4,43,568(தெரு விளக்கு தானியங்கி ஸ்விட்சுகள் சப்ளை செய்தல்)
  6. வவுச்சர் எண் .485/5.12.14ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  7. வவுச்சர் எண். 551/6.1.15ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  8. வவுச்சர் எண்.618/5.2.15ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-
  9. வவுச்சர் எண்.678/9.3.15ல் சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் ரூ5,98,696/-

இப்படி  மார்ச்  2014 முதல் மார்ச் 2015 வரை சன் வியூ எண்டர்பிரைசஸ் பெயரில் மாதா, மாதம் ரூ5,98,696/-என்று தெரு விளக்கு பராமரித்தல் பெயரில் பில் போடப்பட்டுள்ளது..

   வவுச்சர் எண்.82/20.5.14 அன்று தெரு விளக்கு பராமரித்தல் பெயரில் ஏப்ரல், மே மாதம் பில் 3/14 & 4/14 என்று குறிப்பிட்டு ரூ11,97,392/-     

  அவிக்னா எண்டர்பிரைசஸ் பெயரில் வசுச்சர் எண்.175/22.7.14ல் வெள்ளாளர் தெருவில்  தெரு விளக்கு பொருத்துதல் என்று ரூ2,98,720/- பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. சன் வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு மாதா, மாதம் ரூ5,98,696/ தெரு விளக்கு பராமரிப்பு பெயரில் பில் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளாளர் தெருவில் தெரு விளக்கு பொருத்துதல் பெயரில் ரூ2,98,720/- எப்படி செலவு செய்யப்பட்டது. மார்ச் 2014 முதல்  21.7.14 வரை வெள்ளாளர் தெருவில் தெரு விளக்குகளே இல்லையா என்று கேள்வி எழுகிறது.

 22.7.14ல் அவிக்னா எண்டர்பிரைசஸ் பெயரில் வசுச்சர் எண்.175 மூலம் ரூ2,98,720/- பட்டுவாடா செய்யப்பட்டதாக போடப்பட்ட பில் போலி பில் என்பது உறுதியாகிறது.

   தெரு விளக்கு பராமரிப்பு பெயரில் சன் வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு மாதா, மாதம் ரூ5,98,696/- பில் போடப்பட்டு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் அவிக்னா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு 19.9.14ல் ரூ5,94,203/- பில் ஏன் போட வேண்டும்.. மின் கோபுர விளக்குகளை பராமரிக்கும் பணி, சன் வியூ எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு மாதா, மாதம் கொடுக்கும் ரூ5,98,696/- பில்லில் சேராதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது..

 ஒவ்வொரு மாதமும் தெருவிளக்கு பராமரிக்க ரூ5,98,696/- செலவாக வாய்ப்பு இல்லை. சன் வியூ எண்டர் பிரைசஸ் கொடுக்கப்பட்ட பணம் பட்டுவாடா வவுச்சரை பார்க்கும் போது, மாதா, மாதம் ரூ5,98,696/- கொடுக்கப்பட்டுள்ளது.. ஒரு மாதம் ரூ5,98,696/ -செலவானால், அடுத்த மாதம் பராமரிப்பு செலவு குறையும்.. எப்படி மாதா,மாதம் ரூ5,98,696/- எப்படி தெரு விளக்கு பராமரிப்பு செலவாகும் என்பதை பார்க்கும் போது, சன் வியூ எண்டர்பிரைசஸ்  மற்றும் அவிக்னா எண்டர்பிரைசஸ் பெயரில் போலி பில் போடப்பட்டு முறைகேடு நடந்துள்ளது உறுதியாக தெரிகிறது..

 தெரு விளக்கு ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் அளித்த புகாரின் பேரில், ஊழல் வழக்கு பதிவு செய்ய, அனுமதி கேட்டுவிஜிலென்ஸ் இயக்குநரகம் தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது.

 

     

 

Comments

comments