திருவேற்காடு நகராட்சி… ஊழலில் இரட்டை வேடம்…

திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட அயனம்பாக்கத்தில் கருமாரியம்மன் நகர், நலப்பள்ளி சாலையில் 18/2, 18/2A, 18/2B போலி சர்வே எண்ணுக்கு மதுரவாயல் தாசில்தார்  செந்தில்வேலன் பட்டா வழங்க, திருவேற்காடு நகராட்சியின் நகரமைப்பு ஆய்வாளர் போலி சர்வே எண்ணில் உள்ள இடத்திற்கு கட்டிட கட்ட அனுமதி கொடுத்துள்ளார்..

 18/2, 18/2A, 18/2B என்ற சர்வே எண்கள் அ பதிவேடு, சிட்டா அடங்கல் எதிலும் இல்லை. சர்வே எண்.18 மேய்ச்சல் புறம்போக்கு, சர்வே எண்.19 சுடுகாடு என்று தான் உள்ளது…போலி சர்வே எண்ணில் அப்ரூவல் கொடுத்த ஆணையின் நகல் மற்றும் வரைப்படத்தின் நகல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டதற்கு, திருவேற்காடு நகராட்சி பொதுத் தகவல் அலுவலர் மூன்றாம் நபர் தகவல், அதனால் மூன்றாம் நபராகி திருமதி ஏ.லதாவிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றப்பிறகுதான் தகவல் அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்…

 ஆர்.எம்.கே பள்ளி கட்டிட அனுமதி வழங்கிய ஆணையின் நகல் மற்றும் அப்ரூவல் வரைப்படத்தில் நகல் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்ட போது, A ‘o’ அளவில் 8 பக்கம் இருப்பதால் ரூ3200/- செலுத்தும்படி கூற, நாம் நகராட்சி கருவூலத்தில் ரூ3200/- செலுத்தியுள்ளோம்..

 அதே போல் BBCL வீட்டுமனைக்கு இறுதி அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் முறைகேடாக, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கப்பட்டுள்ளது…

 ஆர்.எம்.கே பள்ளி மூன்றாம் நபர் தகவல் என்பதால் ஆர்.எம்.கே பள்ளியின் நிர்வாகத்திடம் தடையில்லா சான்றிதழ்  பெற்றப்பிறகுதான் தகவல் அளிக்க முடியும் என்று ஏன் சொல்லவில்லை…

 இதிலிருந்து 18/2, 18/2A, 18/2B போலி சர்வே எண் என்பது உறுதியாகிவிட்டது..போலி சர்வே எண்ணுக்கு கொடுக்கப்பட்ட அப்ரூவல் மற்றும் பட்டாவும் விரைவில் ரத்து செய்யப்படும்…

  இப்படி திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு பிரிவு, பொதுத் தகவல் அலுவலரும் ஊழலில் இரட்டை வேடம் போடுகிறார்கள்.

 

 

 

Comments

comments