திருவேற்காடு நகராட்சி ஊழல்-BBCL வீட்டு மனை அப்ரூவல்- CMDAயை உத்தரவு குப்பையில்….

திருவேற்காடு நகராட்சி பெயரை கேட்டாலே ஊழல் நகராட்சியா என்று அதிகாரிகள் பதில் அளிக்கிறார்கள்.. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் அகரம், அய்யனம்பாக்கம் இரு இடங்களிலும் BBCL Western Construction வீட்டு மனை அப்ரூவலுக்கு ஏப்ரல் 2015ல் திருவேற்காடு நகராட்சியில் மனு அளித்தது.

 ஆனால் BBCL Western Construction குறிப்பிட்டுள்ள சர்வே எண்களில் வீட்டுமனை, அடுக்குமாடி குடியிருப்புக்கு அப்ரூவல் அளிக்க கூடாது என்று பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை 20.6.13ல் திருவேற்காடு நகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் அந்த கடிதத்தை மதிக்காத திருவேற்காடு நகராட்சி, அப்ரூவல் விண்ணப்பத்தை சி.எம்.டி.ஏவுக்கு 30.4.15ல் அனுப்பி வைக்கிறது.

  இந் நிலையில் YUGA developers என்ற நிறுவனம்  BBCL Western Construction வீட்டுமனைக்கு அப்ரூவல் கொடுக்க கூடாது என்று கடிதம் அனுப்ப, அப்ரூவல் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

 ஊரக தொழில் துறை பெஞ்சுமின் சிபாரிசு செய்ய, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சி.எம்.டி.ஏ அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவிட  மூன்றாண்டுகள் கழித்து 4.4.18ல் சில கண்டிசன் பேரின்  BBCL Western Construction அப்ரூவல் அளிக்கப்பட்டது.

  1. The Roads & park are formed as shown in the plan.
  2. compliance of PWD – WRO condition
  3. To raise the level of the two 7.20m wide roads which extend from the site under reference to the adjacent layout on the eastern side by providing a gentle slope of not less than 1:25

   இப்படி பல கண்டிசன்களை போட்டு, சி.எம்.டி.ஏ அப்ரூவல் கொடுத்தது. அப்ரூவல் கொடுத்து 150 நாட்களாகியும்  சி.எம்.டி.ஏ கண்டிசன்களை நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரும், நகராட்சி ஆணையரும் சி.எம்.டி.ஏ கண்டிசன்களை BBCL Western Construction நிறைவேற்றி உள்ளதா என்று ஆய்வு செய்யவில்லை..அந்த பக்கமே செல்லவில்லை.. அந்தளவுக்கு பணம் பரிமாற்றம் நடந்துள்ளது..

 சி.எம்.டி.ஏ உத்தரவுகளை/கண்டிசன்களை மதிக்காமல், BBCL Western Construction ஆதரவாக திருவேற்காடு நகராட்சி செயல்படுகிறது..

           திருவேற்காடு நகராட்சி ஊழல் நகராட்சி என்பது உறுதியாகிவிட்டது..

                               

 

 

Comments

comments

About Anbu Admin

Check Also

பொள்ளாச்சி…காமவேட்டை- மக்கள்செய்திமையத்துக்கு தொடர் மிரட்டல்..

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளில் தொடங்கி அழகாக வசதியாக இருக்கும் குடும்ப பெண்கள் வரை நாசமாக்கிய  திருநாவுக்கரசு, சதீஷ்,சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய …

Leave a Reply

Your email address will not be published.