திருவேற்காடு நகராட்சியில்…. மூவர் அணியின் ஊழல் ஆட்டம்

திருவேற்காடு நகராட்சியில் ஊழல் ஆட்டம் எல்லை மீறிக்கொண்டு இருக்கிறது.  நகரமைப்பு பணிகளை கவனிக்கும் பெண் அதிகாரி உள்பட மூவர்  ஊழல் அணி, சொத்துக்களை குவித்து வருகிறதாம்…

 பெருமாள் அகரம், ஆவடி, நூம்பல் ஆகிய இடங்களில் உள்ள மூவர் ஊழல் அணியின் சொத்துக்கள்  உட்பட பல சொத்துக்கள் எஸ்.ஆர் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. இதையெல்லாம் நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மேல் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை..

 நகரமைப்பில்  ஐஸ்கிரீம் பெயரில் உள்ள நபர், கொடுக்கும் பிளான் அப்ரூவல் வரைப்படங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்பது எழுதபடாத சட்டமாம். உதாரணமாக இதுவரை 320 பிளான் அப்ரூவல் கொடுத்திருந்தால், அதில் 319 பிளான் வரைப்படம் ஐஸ்கீரிம் பெயரில் உள்ள நபரின் வரைபடமாம்…75 பேர் வரைப்பட அப்ரூவல் பெற்றவர்கள் இருக்கும் போது, ஐஸ்கீரிம் பெயரில் உள்ள நபருக்கு மட்டும் அனுமதிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது..

  பெண் அதிகாரி தலைமையில் ஊழல் அணியில் உள்ள நகரமைப்பு உதவியாளர் பெயரில் திருவேற்காட்டில் ரூ4கோடி மதிப்பிலான நிலத்தை விற்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ரூ4கோடிக்கான சொத்து எப்படி வந்தது, எஸ்.ஆர் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா…பிறகு எப்படி அரசு ஊழியர்கள்  தைரியமாக ஒப்பந்தம் போடுகிறார்…எப்படி உயரதிகாரிகள் வேடிக்கை பார்க்கிறார்கள்..

  ஆனால் விஜிலென்ஸ் விசாரிக்க தொடங்கிவிட்டது…விஜிலென்ஸ் அதிகாரி கவிதாவா…இல்லை…அப்ப…ராஜா… அருண் ஐஸ்கீரிம் சாப்பிட வேண்டியதுதான்…

  என்னமோ நடக்குது… ஒண்ணுமே புரியவில்லை.. ஒரே மர்மாக இருக்கிறது….

 

Comments

comments