திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம்- முடங்கி போய்விட்டதா…உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு அவமதிப்பு..

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடங்கி போய்விட்டது. அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்ரமிப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தும் மாவட்ட வருவாய் அதிகாரி ஏன் ஆக்ரமிப்பை அகற்றவில்லை..

  1. திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட  அய்யனம்பாக்கத்தில் நீர் நிலை புறம்போக்கு, சுடுகாடு, மேய்க்கால் புறம்போக்கு, குளம், குட்டை, பாட்டை ஆக்ரமிப்பை அகற்ற உயர்நீதிமன்றம் 30.10.2017ல்(27705/2017) தீர்ப்பு வழங்கியது. உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கி 13 மாதங்களாகிவிட்டது மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அதிகாரி ஆக்ரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பு அவமதிப்பு வழக்கில் நீதிமன்றத்தின் முன் நின்றால்தான் ஆக்ரமிப்பை அகற்றுவார்களோ…

 ஆனால் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள சர்வே எண்ணுக்கு அதாவது கருமாரியமம்ன் நகர், வெல்பேர் பள்ளி அருகே மேய்க்கால் புறம்போக்கு, சுடுகாட்டை ஆக்ரமிப்புக்கு திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் அப்ரூவல் வழங்கியுள்ளது.

 அய்யனம்பாக்கத்தை, மதுரவாயல் தாசில்தார் அலுவலகத்திலிருந்து, பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்துக்கு மாற்றிவிட்டார்கள்.. ஏன்..எப்படி என்ற கேள்விக்கு உள்ளூர் அமைச்சரின் உத்தரவு… திருவள்ளூர் மாவட்டத்துக்கு, உள்ளூர் அமைச்சர்தான் நீதிபதி என்கிறார்கள்..

  பூந்தமல்லி தாசில்தாராக திருவேற்காடு நகராட்சி நகரமைப்பு ஆய்வாளரின் சகோதரி திருமதி புனிதவதிபணியாற்றுகிறார். அதனால் அய்யனம்பாக்கம் ஆக்ரமிப்பு அகற்ற உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குப்பைக் கூடைக்கு போய்விட்டது.

  1. ஆவடி பெரு நகராட்சி கோயில் பதாகையில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் நிலம் 25 ஏக்கர் ஆக்ரமிக்கப்பட்டது. போலி பத்திரங்கள் மூலம் ஆக்ரமித்தவர்களுக்கு ஆவடி நகராட்சியும், சி.எம்.டி.ஏவும் அப்ரூவல் கொடுத்துள்ளது.. மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
  2. பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் தாமரைச் செல்வன், அரசு நிலங்களை ஆக்ரமித்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்ட அப்ரூவல் கொடுத்துள்ளார். பனையத்தம்மன் கோயில் குளம் முழுவதும் ஆக்ரமிக்கப்பட்டு அப்ரூவலுடன் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.. மாவட்ட நிர்வாகத்துக்கு டன் கணக்கில் புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

 இப்படி திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆக்ரமிப்பு அகற்றப்படவில்லை. ஆக்ரமிக்கப்பட்ட அரசு நிலங்களில், ஆக்ரமிப்பாளர்களுக்கு கட்டிடம் கட்ட அப்ருவல் கொடுக்கப்பட்டுள்ளது..

 திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடங்கி போய்விட்டதா..குறட்டை விடுகிறதா….

 

                   

 

 

Comments

comments