திருவள்ளூர் மாவட்டம் – வில்லிவாக்கம் யூனியன் – வெள்ளானூர்.. ரூ300 கோடிக்கு மணல் கடத்தல்…அதிகாரிகளுக்கு வார மாமூல்

மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது…மக்கள்செய்திமையம் மணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் பட்டியலை வெளியிட முடிவு செய்துள்ளது..

         திருவள்ளூர் மாவட்டம், வில்லிவாக்கம் பஞ்சாய்த்து யூனியன் வெள்ளானூர் கிராம பஞ்சாய்த்தை சேர்ந்த காட்டூர் மற்றும் பொத்தூர் கிராமங்களில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட அரசு புறம்போக்கு நிலங்களிலிருந்து ரூ300 கோடி மதிப்புள்ள  மணலை கடந்த இரண்டாண்டுகளில் மணல் மாபியாக்கள்  கடத்தி விற்று உள்ளார்கள்.. இந்த கிராமங்களில் மணல் மட்டுமல்ல, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல கனிமங்களை கடத்தியுள்ளார்கள்..

  வெள்ளானூர் கிராம பஞ்சாய்த்து, ஆவடி தாசில்தார் அதிகாரவரம்புக்குள் வருகிறது.. மணல் கடத்தல், மாபியாக்கள் ஆவடி தாசில்தார், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி, ஆர்.டி.ஒ மற்றும் வில்லிவாக்கம் பஞ்சாய்த்து யூனியன் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு வாரா, வாரம் மாமூல் கொடுத்து வருகிறார்கள்..

 200 ஏக்கரில் உள்ள படங்களை பாருங்கள்… சுமார் 300 அடிக்கு மணல் உள்ளிட்ட கனிமங்களை பொக்லைன் மூலம் வெட்டியெடுத்துள்ளார்கள்… தினமும் மாலை முதல் விடிய, விடிய 70 முதல் 100 லாரிகளில் மணல் உள்ளிட்ட கனிமங்கள் கடத்தப்பட்டு வருகிறது.. 8.5.18 இரவு மட்டும் 76 லாரிகளில் மணல் கடத்தப்பட்டது…

   சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பின்படி மணல் கடத்தலுக்கு துணை போகும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்தால், மாவட்ட ஆட்சித்தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், காவல்துறையினர்  என்று மாவட்ட நிர்வாகமே சிறையில் தான் இருக்கும்…

           மணல் கொள்ளையை ஆதாரங்களுடன் வெளியிட்டு உள்ளோம்..

                        உயரதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா..

                         

 

Comments

comments