திருவள்ளூர் மாவட்டம்-சவுடு, மணல், கிராவல் கொள்ளை..

சென்னை புறநகர் பகுதி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சவுடு, மணல், கிராவல் உள்ளிட்ட கனிம வளங்கள் ஏரி, குளம், குட்டைகளில் எடுத்துக்கொள்ள அனுமதி என்ற பெயரில் மெகா கொள்ளை தினமும் அரங்கேறி வருகிறது..

 சீனிவாசன் சோழவரம் சவுடு பர்மிட் – 2343 லோடு, சுதாகர் புதிய பெருங்களத்தூர் சவுடு –  4783 லோடு, கிருஷ்ண வாட்டர் சப்ளை செயற் பொறியாளர் 20,576 லோடு & 20,679 லோடு இப்படி ஜனவரி 2017 முதல் பிப்ரவரி 2018 வரை 16 பர்மிட் கொடுக்கப்பட்டுள்ளது..

 இதில் என்ன புரியாதா புதிர் என்றால்.. 2000 லோடு பர்மிட், 3000 லோடு பர்மிட் என்றால் சரி..

 2343 லோடு, 4783லோடு,2630 லோடு என்று எப்படி கணக்கீட்டு பர்மிட் கொடுக்கிறார்கள் என்பது புரியவில்லை..

 கிருஷ்ண வாட்டர் சப்ளை செயற் பொறியாளருக்கு ஒராண்டில் 41,000 லோடு சவுடு மண் எதற்கு.. ஒரு லோடு என்பதற்கு எத்தனை டன் என்ற விவரங்களும் இல்லை..

  சவுடு, மணல், கிராவல் உள்ளிட்ட கனிம வளங்கள் பர்மிட் கொள்ளை, மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கம் அமைச்சர் அலுவலகத்தில் பனங்குடி அந்தோணிசாமி அய்யாதான் முடிவு செய்வாராம்..

 சவுடு, மணல், கிராவல் எல்லாம் பினாமி பெயர்களில் எடுப்பது பனங்குடி அந்தோணிசாமி அய்யாதானாம்..

 ஊரக தொழில்துறை அமைச்சர் அலுவலகத்திலேயே பனங்குடி அந்தோணிசாமி அய்யா இருப்பாராம்.. அங்கு அனைத்து பேரங்களும், அமைச்சர் ஆசியுடன் பேசி முடித்துவிடுவார். கிண்டியில் உள்ள புவியியல் சுரங்கத்துறை இயக்குநருக்கும்,  திருவள்ளூர் உதவி இயக்குநருக்கும் வாய் மொழி உத்தரவு செல்போன் வாட்ச் அப் காலில் சொல்லிவிடுவார்கள்.. அடுத்த சில மணி நேரங்களில் பர்மிட் கிடைத்துவிடும்..

வருவாய்த்துறை உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், தாசில்தார்கள் , உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளின் நன்கு கவனித்துவிடுவார்களாம்..அதனால் அரசு அதிகாரிகள் கனிமங்களின் கொள்ளை கண்டுகொள்ளுவதில்லை..

  திருவள்ளூர் மாவட்ட கனிம வள கொள்ளையைப்பற்றி முணு,முணுத்தாலே அடியாட்கள் மிரட்டுகிறார்களாம்… நமக்கு எதுக்கு இந்த பெரிய இடத்து வம்பு..

 

Comments

comments