திருவள்ளூர் மக்களவைத் தொகுதி… பின் தங்கிய கை சின்னம்.. முன்னணியில் பரிசுப் பெட்டி கெஞ்சும் இரட்டை இலை..

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரசு வேட்பாளர்  ஜெயக்குமாரும், அதிமுக கூட்டணியில் தற்போதைய எம்.பியுமான வேணுகோபாலும், அம்மா மக்கள்முன்னேற்றக் கழத்தின் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ பொன்.ராஜாவும் களத்தில் உள்ளார்கள்..

 அதிமுக வேட்பாளரும், தற்போதைய எம்.பியுமான வேணுகோபால், 2014ல் தன் வெற்றிக்கு காரணமாக இருந்த பூந்தமல்லி, மாதவரம், ஆவடி தொகுதிகள் முன்னேற்றத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை.. வேணுகோபால், கோவையில் உள்ள அமைச்சருடன் கூட்டணி அமைத்து, கோவை மாநகராட்சிக்கு மட்டும் பல கோடி நிதிகளை பெற்று தந்தார். வேணுகோபால் மீது உள்ள அதிருப்தியால், சீட் கிடைக்குமா என்ற சர்ச்சை அதிமுகவில் எழுந்த போது, கோவை அமைச்சர் சிபாரிசில்தான் இன்று களத்தில் உள்ளார்.

   வேணுகோபால் 2014 தேர்தலில் 6.28 இலட்சம் வாக்கு பெற்றார். ஆனால் தற்போது அம்மா முன்னேற்றக் கழகம் அதிமுகவின் 60 சதவிகித வாக்குகளை பிரித்துவிடும். அம்மா முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பொன்.ராஜா  பொன்னேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ என்பதால், பொன்னேரி, கும்முடிப்பூண்டி தொகுதிகளில் அதிமுகயைவிட அதிக வாக்குகள் பெற வாய்ப்புகள் அதிகம்..

 தேமுதிக 2014ல் 2.04 இலட்சம் வாக்குகளை பெற்றது. ஆனால் தற்போது திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக கட்சியே இல்லை. தேமுதிகவினர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துவிட்டார்கள்..அதனால் தேமுதிக வாக்கு வங்கி நம்பி அதிமுக வேட்பாளர் வேணுகோபால் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

 திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரசு வேட்பாளர் ஜெயக்குமார் 2014ல் தேர்தலில் 43,960 வாக்குகளை மட்டுமே பெற்றார். திமுக  கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமார் 3.05 இலட்சம் வாக்குகளை பெற்றார்.

 களத்தில் உள்ள காங்கிரசு வேட்பாளர் கும்முடிபூண்டி வேணுவிடமும், ஆவடி நாசரிடமும் பல லட்சம் கொடுத்தேன் இருவரும் எனக்கு சரியாக பணியாற்றவில்லை என்று திமுக தலைமையிடம் புகார் கூறியுள்ளார்.. இதனால் திமுக, காங்கிரசு இடையே பல இடங்களில் கருத்து வேறுபாடு அதிகமாகி உள்ளது.

 திருவள்ளூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கும், திமுக கூட்டணி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு இடையே தான் போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் பொன்.ராஜாவும், அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கும் இடையேதான் போட்டி உள்ளது.

 வேணுகோபால், தொகுதி மக்களிடம் நான் ஐந்தாண்டுகளில் செய்யாத, செய்ய மறந்து போன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்று கெஞ்சி, கெஞ்சி வாக்கு கேட்டுகிறார்..

  பரிசுப் பெட்டி வேட்பாளர் பொன்.ராஜா முன்னணிக்கு வருகிறார்.. பொன்.ராஜா பிரச்சாரத்தின் வேகத்தை அதிகப்படுத்தினால் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம்..

 திருவள்ளூர் தொகுதியில் அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை தொகுதிக்கு 2000 புத்தகம் என 12,000 புத்தகங்களை மக்களிடம் கொடுக்கும் பணியை மக்கள்செய்திமையம் செய்து வருகிறது.

Comments

comments