திருவண்ணாமலை மாவட்டம்- MY CHILD MY CARE அமைப்பு- கோடிக்கணக்கில் முறைகேடா?

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து, MY CHILD MY CARE என்ற அறக்கட்டளை தொடங்கி கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளார்கள்..

  முதன்மைக் கல்வி அதிகாரி வெ.ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12,000 ஆசிரியர்களிடம் MY CHILD MY CARE அமைப்புக்கு  கட்டாய  வசூல் ரசீது இல்லாமல் ரூ3கோடி வசூலித்துள்ளார்.

 மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் சமூக ஆர்வலர், தொழில் அதிபர்கள், பொது மக்கள், வணிகர்களிடம் கட்டாய வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் வங்கி கணக்கு எண்ணை அறிவித்துள்ளார்.. MY CHILD MY CARE அறக்கட்டளை தொடங்க தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

 MY CHILD MY CARE அறக்கட்டளைக்கு வசூல் செய்த பணத்துக்கு கணக்கு வழக்கு உண்டா…

  மக்கள்செய்திமையம் தமிழக ஆளுநர் அவர்களுக்கும்,  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கும் ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளது..

பெறுநர்                                                                                                   8.10.18                                                                                                          

                 இயக்குநர் அவர்கள்,

                 ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம்,

                 ஆலந்தூர் – சென்னை -16.

அய்யா,

             பொருள்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் K.S கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கி, ஆசிரியர்களிடம் கட்டாயம் வசூல் செய்துள்ளார்கள்.. கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பான புகார்..

 திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சித் தலைவர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து ஏப்ரல் 2018ல் MY CHILD MY CARE என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். இந்த அமைப்பு ஏற்படுத்தும் போது,பதிவு எதுவும் செய்யப்படவில்லை. பின்னர் சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

 MY CHILD MY CARE அமைப்புக்கு 16.4.18 முதல் ஆசிரியர்களிடம் கட்டாய நன்கொடை வசூல் செய்ய உத்தரவிடுகிறார் முதன்மைக் கல்வி  அலுவலர் வெ.ஜெயக்குமார்..

 முதன்மைக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை என்ற பெயரில்  அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் மாவட்ட கல்வி அலுவலர்களால் நடத்தப்படும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில்  MY CHILD MY CARE என்னும் அறக்கட்டளைக் குறித்து எடுத்துரைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அளிக்கும் நிதி குறித்து விவரங்களை கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது..(படிவத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)

 MY CHILD MY CARE  அமைப்புக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் தொடங்கி மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை ஒவ்வொரு ஆசிரியரிடமும் தலா ரூ2000 முதல் ரூ5000 வரை கட்டாய வசூல் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது கொடுக்கப்படவில்லை.

 கீழ் பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள்/பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் வி.டி.658(வ) தலைவர் த. செந்தில்குமரன் MY CHILD MY CARE   திட்டத்தின் துவக்கவிழா 164.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் முன்னிலையில் முதன்மைக் கல்விஅலுவலரிடம் கடன் சங்கத்தலைவர் என்ற முறையில் ரூ10,000/-ம், சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் சார்பாக ரூ10,000/- என ரூ20,000/- கொடுத்தேன். இது நாள் வரை ரசீது வழங்கவில்லை என்று 16.7.18ல் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மிரட்டி, கட்டயமாக ரசீது இல்லாமல்  வசூல் செய்யப்பட்டதை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளார்கள்..

  16.7.18ல் புகார்க் கொடுத்து, 80 நாட்களாகியும் இதுவரை ரசீது கொடுக்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12,000  ஆசிரியர்களிடமும் ஒரு நாள் சம்பளம் ரூ2000/- என தோராயமாக கணக்கீட்டால் ரூ2.40கோடி வசூலாகி உள்ளது.

 இதை தவிர 2000க்கு மேற்பட்ட  ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு ரூ5000,ரூ10,000 என வசூல் செய்யப்பட்டுள்ளது. இது வரை வசூல் ஆசிரியர்களிடம் கட்டயமாக  வசூல் செய்யப்பட்ட ரூ 3கோடிக்கு ரசீது கொடுக்கப்படவில்லை.

 MY CHILD MY CARE  திட்டத்துக்கு கட்டாயமாக நன்கொடை என்ற பெயரில் ரசீது இல்லாமல் பல கோடி வசூல் செய்யப்படுகிறது என்று புகார் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்றது. இதனை தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ந.க.எண்.3096/ஆ2/2018 தேதி10.8.18ல்  அனைத்து பள்ளிக்களுக்கு கடிதம் அனுப்புகிறார். MY CHILD MY CARE  அமைப்புக்கு கட்டாயப்படுத்தி, நிதி வசூல் செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விருப்பம் இல்லாமல் நிதியளித்த அனைத்து ஆசிரியர்களுக் தாங்கள் அளித்த திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.(கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது).

 முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி 1973க்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

  MY CHILD MY CARE அமைப்புக்கு ரசீது கொடுத்து, நிதி பெற்றிருந்தால், எப்படி நிதியை திருப்பி கொடுக்க முடியும், இதிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ரசீது கொடுக்காமல் ஆசிரியர்களிடம் ரூ3 கோடி கட்டாயம் வசூல் செய்திருப்பது உறுதியாகிறது.

 முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆசிரியரிடம் ரசீது இல்லாமல் கட்டாயமாக வசூல் செய்யப்பட்ட ரூ3கோடிக்கு கணக்கு, வழக்கும் எதுவும் இல்லை..

 இதே போல் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும் DISTRICT COLLECTOR MY CHILD MY CARE EDUCATION Account no. 376831552168 SBI Tiruvannamalai என்ற சுற்றிக்கையே அனுப்பி உள்ளார்( நகல் இணைக்கப்பட்டுள்ளது)

 திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE EDUCATION என்ற திட்டத்தின் பெயரில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளார்கள்.. இதில் ஆசிரியர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ3கோடி உள்ளிட்ட பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சாலை முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் மிரட்டி, கட்டாயமாக வசூல் செய்யப்பட்ட ரூ4கோடிக்கு ரசீது கொடுக்கப்படவில்லை. அதனால் வசூல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரமே தெரியாது. ரசீது இருந்தால் தானே எவ்வளவு வசூல், எவ்வளவு செலவு என்று தெரியும். வசூலுக்கு ரசீது கொடுக்கவில்லை என்றால், வசூலில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாக தெரிகிறது.

 மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE EDUCATION அமைப்பை ஏற்படுத்த, தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை.   முதலமைச்சர் பொது நிதி மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி பெறப்படுகிறது. இந்த நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ், வங்கி கணக்கு எண்ணை வெளியிட்டு, நிதி வசூல் செய்வது, அமைப்பு தொடங்குவது  THE ALL INDIA SERVICES (CONDUCT) RULES, 1968 எதிராக உள்ளது.

 MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்த பணத்தை எப்படி, யார் நிர்வகிப்பது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.. சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்துவிட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமார் கூறி வருகிறார். மேலும் MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் வசூல் செய்யப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது.

   MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் ரசீது இல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொது மக்களிடம் மிரட்டி, கட்டாய  வசூல் செய்த சுமார் ரூ5கோடி நிதியில், கோடிக்கணக்கில் முறைகேடு செய்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ,  மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்  இருவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, உரிய நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பெறுநர்                                                                                                   8.10.18                                                                                                          

              மேதகு ஆளுநர் அவர்கள்,

              தமிழ்நாடு அரசு,

               ராஜ்பவன் – கிண்டி,

               சென்னை -22.

மதிப்பிற்குரிய அய்யா,

             பொருள்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் K.S கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE என்ற பெயரில் டிரஸ்ட் தொடங்கி, ஆசிரியர்களிடம் கட்டாயம் வசூல் செய்துள்ளார்கள்.. கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது தொடர்பான புகார்..

 திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சித் தலைவர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் இருவரும் சேர்ந்து ஏப்ரல் 2018ல் MY CHILD MY CARE என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். இந்த அமைப்பு ஏற்படுத்தும் போது,பதிவு எதுவும் செய்யப்படவில்லை. பின்னர் சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

 MY CHILD MY CARE அமைப்புக்கு 16.4.18 முதல் ஆசிரியர்களிடம் கட்டாய நன்கொடை வசூல் செய்ய உத்தரவிடுகிறார் முதன்மைக் கல்வி  அலுவலர் வெ.ஜெயக்குமார்..

 முதன்மைக் கல்வி அலுவலர் திருவண்ணாமலை என்ற பெயரில்  அனைத்து வகைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் மாவட்ட கல்வி அலுவலர்களால் நடத்தப்படும் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில்  MY CHILD MY CARE என்னும் அறக்கட்டளைக் குறித்து எடுத்துரைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அளிக்கும் நிதி குறித்து விவரங்களை கீழ்க்கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து, சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது..(படிவத்தின் நகல் இணைக்கப்பட்டுள்ளது)

 MY CHILD MY CARE  அமைப்புக்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களில் தொடங்கி மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வரை ஒவ்வொரு ஆசிரியரிடமும் தலா ரூ2000 முதல் ரூ5000 வரை கட்டாய வசூல் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் கொடுத்த பணத்துக்கு ரசீது கொடுக்கப்படவில்லை.

 கீழ் பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள்/பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் வி.டி.658(வ) தலைவர் த. செந்தில்குமரன் MY CHILD MY CARE   திட்டத்தின் துவக்கவிழா 164.2018 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் முன்னிலையில் முதன்மைக் கல்விஅலுவலரிடம் கடன் சங்கத்தலைவர் என்ற முறையில் ரூ10,000/-ம், சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் சார்பாக ரூ10,000/- என ரூ20,000/- கொடுத்தேன். இது நாள் வரை ரசீது வழங்கவில்லை என்று 16.7.18ல் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதே போல் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மிரட்டி, கட்டயமாக ரசீது இல்லாமல்  வசூல் செய்யப்பட்டதை பள்ளிக் கல்வி இயக்குநருக்கு புகார் அனுப்பி உள்ளார்கள்..

  16.7.18ல் புகார்க் கொடுத்து, 80 நாட்களாகியும் இதுவரை ரசீது கொடுக்கப்படவில்லை. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12,000  ஆசிரியர்களிடமும் ஒரு நாள் சம்பளம் ரூ2000/- என தோராயமாக கணக்கீட்டால் ரூ2.40கோடி வசூலாகி உள்ளது.

 இதை தவிர 2000க்கு மேற்பட்ட  ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு ரூ5000,ரூ10,000 என வசூல் செய்யப்பட்டுள்ளது. இது வரை வசூல் ஆசிரியர்களிடம் கட்டயமாக  வசூல் செய்யப்பட்ட ரூ 3கோடிக்கு ரசீது கொடுக்கப்படவில்லை.

 MY CHILD MY CARE  திட்டத்துக்கு கட்டாயமாக நன்கொடை என்ற பெயரில் ரசீது இல்லாமல் பல கோடி வசூல் செய்யப்படுகிறது என்று புகார் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு சென்றது. இதனை தொடர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ந.க.எண்.3096/ஆ2/2018 தேதி10.8.18ல்  அனைத்து பள்ளிக்களுக்கு கடிதம் அனுப்புகிறார். MY CHILD MY CARE  அமைப்புக்கு கட்டாயப்படுத்தி, நிதி வசூல் செய்வதாக புகார் பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விருப்பம் இல்லாமல் நிதியளித்த அனைத்து ஆசிரியர்களுக் தாங்கள் அளித்த திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.(கடித நகல் இணைக்கப்பட்டுள்ளது).

 முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார், தமிழக அரசு ஊழியர்கள் நன்னடத்தை விதி 1973க்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

  MY CHILD MY CARE அமைப்புக்கு ரசீது கொடுத்து, நிதி பெற்றிருந்தால், எப்படி நிதியை திருப்பி கொடுக்க முடியும், இதிலிருந்து முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ரசீது கொடுக்காமல் ஆசிரியர்களிடம் ரூ3 கோடி கட்டாயம் வசூல் செய்திருப்பது உறுதியாகிறது.

 முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆசிரியரிடம் ரசீது இல்லாமல் கட்டாயமாக வசூல் செய்யப்பட்ட ரூ3கோடிக்கு கணக்கு, வழக்கும் எதுவும் இல்லை..

 இதே போல் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும் DISTRICT COLLECTOR MY CHILD MY CARE EDUCATION Account no. 376831552168 SBI Tiruvannamalai என்ற சுற்றிக்கையே அனுப்பி உள்ளார்( நகல் இணைக்கப்பட்டுள்ளது)

 திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE EDUCATION என்ற திட்டத்தின் பெயரில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளார்கள்.. இதில் ஆசிரியர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ3கோடி உள்ளிட்ட பொது மக்கள், சமூக ஆர்வலர்கள், தொழிற்சாலை முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடம் மிரட்டி, கட்டாயமாக வசூல் செய்யப்பட்ட ரூ4கோடிக்கு ரசீது கொடுக்கப்படவில்லை. அதனால் வசூல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு என்ற விவரமே தெரியாது. ரசீது இருந்தால் தானே எவ்வளவு வசூல், எவ்வளவு செலவு என்று தெரியும். வசூலுக்கு ரசீது கொடுக்கவில்லை என்றால், வசூலில் முறைகேடு நடந்துள்ளது உறுதியாக தெரிகிறது.

 மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்யும், முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமாரும் கூட்டணி அமைத்து MY CHILD MY CARE EDUCATION அமைப்பை ஏற்படுத்த, தமிழக அரசிடம் அனுமதி பெறவில்லை.   முதலமைச்சர் பொது நிதி மற்றும்  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி பெறப்படுகிறது. இந்த நிதிக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

 மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ், வங்கி கணக்கு எண்ணை வெளியிட்டு, நிதி வசூல் செய்வது, அமைப்பு தொடங்குவது  THE ALL INDIA SERVICES (CONDUCT) RULES, 1968 எதிராக உள்ளது.

 MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் கோடிக்கணக்கில் வசூல் செய்த பணத்தை எப்படி, யார் நிர்வகிப்பது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.. சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்துவிட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் வெ. ஜெயக்குமார் கூறி வருகிறார். மேலும் MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் வசூல் செய்யப்பட்ட நிதியில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது.

   MY CHILD MY CARE EDUCATION அமைப்பு பெயரில் ரசீது இல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும்  பொது மக்களிடம் மிரட்டி, கட்டாய  வசூல் செய்த சுமார் ரூ5கோடி நிதியில், கோடிக்கணக்கில் முறைகேடு செய்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் ,  மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ்  இருவர் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

                                                                                                       தங்கள் உண்மையுள்ள,

                                                                                                             வி.அன்பழகன்

                                                                                                         மூத்த பத்திரிகையாளர்

Comments

comments