திருமதி கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் …ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்றுகிறாரா…

தமிழக அரசின் மீது பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட புகாரை, தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஏன்…?

  Petn.No.11150/2018/PUB/CC – HQ dated 16.11.2018 ல் நகராட்சி நிர்வாக ஆணையர் பிரகாஷ் ஐ.ஏ.எஸ் & Petn.No.11089/2018/PUB/CC-HQ dated 16.11.18ல் பேரூராட்சிகளின் இயக்குநர்  பழனிசாமி ஐ.ஏ.எஸ்  & Petn.No.10100/2018/PUB/TVM dated 16.10.18ல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ், திருவண்ணாமலை முதன்மை கல்வி அதிகாரி ஜெயக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், தலைமைச் செயலாளர் திருமதி டாக்டர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்க்கு பரிந்துரை செய்துள்ளது.

பழனிசாமி ஐ.ஏ.எஸ் ஆவணம்..

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஆவணம்..

  ஆனால் தலைமைச் செயலாளர், குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, அவர்கள் வகிக்கும் துறைத் தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படக் கூடவில்லை. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐ.ஏ.எஸ் மாற்றப்படாமல் இன்னும் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்..

  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்வது ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்றவா என்ற கேள்வி எழுந்துள்ளது..

  மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் கொடுத்த  ஊழல் புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், திருத்தப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டம் 17(A)(1)ன்படி தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்த 20க்கு மேற்பட்ட புகார்கள் தலைமைச் செயலாளர் அலுவலகத்தில் முடங்கி கிடக்கிறது.

  தலைமைச் செயலாளர் திருமதி டாக்டர் கிரிஜா வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் பரிந்துரை செய்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவாரா?

 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை காப்பாற்ற முயற்சி செய்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது..

 

                           

Comments

comments