திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில்-ஒ.ராசாவை புறக்கணித்த அமைச்சர்கள்-அடையாள அட்டையில் தமிழ் கொலை..

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் சூரசம்ஹார விழாவில் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கும், எடப்பாடி பழனிசாமி அணிக்கு இடையே மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. சூரசம்ஹார விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அமைச்சர் வெல்லமண்டி நடராசன், அமைச்சர் காமராஜ் ஆகிய நான்கு அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள்.

 துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தம்பி ஒ.ராஜா வந்த போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இருவரும் ஒடி வந்து ஒ.ராஜாவை பார்த்து கைக்கூப்பி கும்பிடு போட்டு, அருகிலேயே நின்றுக்கொண்டு இருந்தார்கள்.. அமைச்சர் வெல்லமண்டி நடராசனும், அமைச்சர் காமராஜ் இருவரும் ஒ.ராஜா பக்கம் போகவில்லை. ஒ.ராசாவை கண்டுகொள்ளவில்லை..ஒ.ராசா மற்ற அமைச்சர்கள் எங்கே என்று அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேட்க, அமைச்சர் பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார்..அமைச்சர்களுக்குள் கோஷ்டி பூசல் இருப்பது, சூரசம்ஹார விழாவில் வெளிச்சத்துக்கு வந்தது..

மாஜி அமைச்சர் செல்லப்பாண்டின், முன்னாள் அமைச்சர் கம் எம்.எல்.ஏ சண்முகநாதன் இருவரும் அமைச்சர்கள் வந்திருந்தும் விழா பக்கமே தலையை காட்டவில்லை.

 உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சுந்தர் அவர்கள் மக்களுடன் மக்களாக நின்று விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். நீதிபதியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நீதிபதி சுந்தர் என் உடம்பில் ஒடும் ரத்தம்தான், அவங்க உடம்பிலும் ஒடுகிறது. விழாவில் மக்கள் இடித்துக்கொண்டு செல்வது தப்பில்லை என்று கூறி பாதுகாப்பு அதிகாரியை போக சொல்லிவிட்டார்..

 திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நிர்வாகம் செய்தியாளர்களுக்கு கொடுத்த அடையாள அட்டையில் செய்தி சேகரிப்பாளர் என்ற வார்த்தையில் தமிழை கொலை செய்தார்கள். தமிழ் கொலை செய்த அடையாள அட்டையில் இணை ஆணையர் கையெழுத்து போடப்பட்டு உள்ளது. வெட்ககேடு…

 

Comments

comments