திருச்செங்கோடு நகராட்சி.. அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிய கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ்

நகராட்சி நிர்வாகத்தின் ஆணையராக மியூச்சல் மாற்றத்தில், பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பதவியிலிருந்து  மாறுதல் பெற்று வந்த முனைவர் தா.கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக மாறிவிட்டார்.

 மக்களவைத் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும்  பெரு நகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பதவிக்கு மாற்றப்படுவார் என்ற உறுதி மொழியுடன் நகராட்சி நிர்வாகத்தின் ஆணையர் பதவிக்கு வந்த கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக மாறிய கதையை படியுங்கள்..

 திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர்(பார்வையில் இப்படி போடலாமா என்று கேள்வி கேட்காதீர்கள்) திருமதி பொன்.சரஸ்வதியின் கடிதத்தின் படி திருச்செங்கோடு நகராட்சியில் பணியாற்றும் அலுவலகம் உதவியாளர், வருவாய் உதவியாளர், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், கணக்கர்(வகுப்பு-4) ஆறு ஊழியர்களையும்  இராசிபுரம், கொமாரபாளையம், ஆத்தூர், மேட்டூர், இராசிபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய நகராட்சிகளுக்கு மாறுதல் செய்து, 4.3.19 உத்தரவிட்டுள்ளார்..

 திருச்செங்கோடு எம்.எல்.ஏ திருமதி.பொன்.சரஸ்வதி அவர்கள் கொடுத்த கடிதத்தின் பேரில், திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் மாறுதல் செய்வது எந்தவிதத்தில் நியாயம்..

 இதை வேடிக்கை என்னவென்றால், மாறுதல் உத்தரவில் படிக்கப்பட்டவை(பார்வை)யில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் என்ற வார்த்தைகள் சரி… கழக பொதுக்குழு உறுப்பினர் என்று  எப்படி குறிப்பிட முடியும்..

 அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக கார்த்திகேயன் மாறிவிட்டார் என்று நாம் தலைப்பில் சொன்னது சரிதானே…

 

 

 

 

Comments

comments