திண்டுக்கல்…அரசு விருந்தினர் மாளிகையிலிருந்து அமைச்சர் சீனிவாசன் ஒட்டம்.பொறியாளர் பாண்டியராஜன் மகிழ்ச்சி

மிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் நத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் மாளிகை உள்ளது. விருந்தினர் மாளிகையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத காரணத்தால் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் வி.ஐ.பிக்கள் விருந்தினர் மாளிகைக்கு வருவதில்லை, தங்குவது இல்லை.

 ஆனால் விருந்தினர் மாளிகையில் பொறுப்பாளர் உதவி பொறியாளர் பாண்டியராஜன் 10 வருடமாக அங்கேயே இருப்பதால், அமைச்சர், வி.ஐ.பிக்கு தண்ணீர் வாங்கியதாக இலட்சக்கணக்கில் போலி பில் போட்டு, தன் பாக்கெட்டில் போட்டு வருகிறார்.

  மாலை முதல் இரவு வரை உள்ளூர் அதிமுகவினர் விருந்தினர் மாளிகையை மதுபான பாராக மாற்றிவிடுவார்கள்.    

 28.1.19 அன்று ஒன்றிய செயலாளர் கூட்டம், விருந்தினர் மாளிகையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடப்பதாக இருந்தது. விருந்தினர் மாளிகைக்கு வந்தவுடன் அமைச்சர், இங்கு கால் கழுவ கூட தண்ணீர் கிடையாது, என்று ஆவேசமாக சத்தம் போட்டுவிட்டு புறப்பட்டார். விருந்தினர் மாளிகையிலிருந்து 5கீமிட்டர் தள்ளி இருக்கும் விடுதிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட பல அமைச்சர்கள் திண்டுக்கலிருந்து இரயிலில் சென்னைக்கு புறப்படும் முன்பு, கட்சிக்காரர்களுடன் விருந்தினர் மாளிகையில் ஆலோசனை நடத்துவது வழக்கம்..

  விருந்தினர் மாளிகையில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அமைச்சர்கள், விஜபிக்கள் தங்குவது இல்லை. ஆனால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாண்டியராஜன் எதைப்பற்றி கவலைபடாமல், விருந்தினர் மாளிகையில் போர்வெல் போட்டு தண்ணீர் கிடைக்க வழி செய்யாமல், தண்ணீர் பெயரில் போலி பில் போட்டு முறைகேடு செய்து வருகிறார்..

            

 

 

Comments

comments