தாம்பரம் பெரு நகராட்சி சிக்கிய நகரமைப்பு ஆய்வாளர் சபேசன் & சரவணன் வாக்குமூலம்?

தாம்பரம் பெரு நகராட்சியில் நகரமைப்பு ஆய்வாளர் ஒருவர் வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளார். அந்த நகரமைப்பு ஆய்வாளர் மீது பல விஜிலென்ஸ் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

 DO WELL ASSOCIATES சபேசனின் வீட்டில் வருமான வரித்துறை 28.3.19ல் ரெய்டு நடத்திய போது ரூ14.21கோடி பிடிப்பட்டது. சபேசன் செல்போனில் வந்த எண்ணைக்கொண்டு நடந்த விசாரணையில் சபேசன் உளறி கொட்ட, அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் சிக்கினார். அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் வீட்டில் வருமான வரித்துறை நடத்திய ரெய்டில், சரவணன் ரூ7 இலட்சம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு இருந்தார். வீட்டில் ரூ70இலட்சம் பிடிப்பட்டது.  மொத்தம் ரூ77இலட்சம் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கியது.

 அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்ய, வருமான வரித்துறை பரிந்துரையின் படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சபேசன் வாக்குமூலத்தின் சிக்கிய அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன், தாம்பரம் பெரு நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர் ரூ7இலட்சம் இலஞ்சம் கொடுத்தனுப்பினார் என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

 அமைச்சரின் நிழல் உதவியாளர் சரவணன் கூறிய தாம்பரம் பெரு நகராட்சியில் பணியாற்றும் நகரமைப்பு ஆய்வாளர் அம்பத்தூர் நகராட்சித் தலைவராக ருக்மாங்குதன் இருந்த போது, நகரமைப்பு பிரிவில் நடந்த அப்ரூவல் ஊழலில் சிக்கிய முவரில் ஒருவராம்..அந்த நகரமைப்பு ஆய்வாளர்  பணியாற்றிய பல நகராட்சிகளிலும் ஊழலில் சிக்கியவர்.. வருமான வரித்துறை விசாரணை வளையத்துக்குள் நகரமைப்பு ஆய்வாளர் சிக்கியுள்ளார்..

 தாம்பரம் பெரு நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் கொடுக்கப்பட்ட அனைத்து அப்ரூவல்களையும், ஆவடி பெரு நகராட்சியில் 2015,2016,2017 ஆகிய மூன்றாண்டுகளில் கொடுத்த அனைத்து அப்ரூவல்களையும் மறு ஆய்வு செய்ய மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் கொடுத்த புகாரின் பேரில் சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.

 சென்னை பெரு நகர வளர்ச்சிக்குழுமம் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டதும், தாம்பரம் பெரு நகராட்சி, ஆவடி பெரு நகராட்சிகளில் நகரமைப்பு பிரிவில் பணியாற்றிய பல நகரமைப்பு ஆய்வாளர்கள், நகரமைப்பு அதிகாரிகள் சிக்குவார்கள்..

Comments

comments