தாம்பரம் நகராட்சி…விஜிலென்ஸ் அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தாம்பரம் நகராட்சி கடந்த ஆறு ஆண்டுகளாக ஊழல் மூழ்கிவிட்டது. மக்கள்செய்திமையம் தாம்பரம் நகராட்சியின் ஊழல்களை ஆதாரங்களுடன் தமிழக ஆளுநர் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. ஆளுநர் அலுவலகத்தின் பரிந்துரையின் பேரில் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம் தேதி மூன்று நாட்கள், விஜிலென்ஸ் அதிகாரிகள் முகாமிட்டு, ஊழல் ஆவணங்களை பார்வையிட்டார்கள்.சில ஆவணங்களை பறிமுதல் செய்தார்கள்..

  தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ஐ மதிக்காத, ஆணையர் கிருஷ்ணமூர்த்தி 8ம் தேதி இரவு 7மணியளவில் நகராட்சியின் முக்கிய அதிகாரிகளை அழைத்து, விஜிலென்ஸ் அதிகாரிகள் தினமும் வந்து போகிறார்கள்.. அதனால் இலஞ்சம் வாங்கி சிக்கி கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கை செய்தார்..

 பிரபலமான ஒப்பந்தகாரர் சிம்லா சரவணன், பிளஸிங்  கன்ஸ்டிரக்சன், அபெக்ஸ் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தகாரர்களின்  பல ஊழல் ஆவணங்கள் சிக்கியுள்ளது..

 விரைவில் ஆணையராக இருந்த அதிகாரிகள், பொறியாளர்கள்  முதல் ஒப்பந்தகாரர்கள் வரை வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது…

 

makkalseithimaiyam மேதகு ஆளுநர் அவர்களிடம் 14.12.17ல் கொடுத்த புகார் மனு விவரங்கள்…

              பொருள்: தமிழக அரசின் உள்ளாட்சித்துறை – நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் காஞ்சிபுரம் மாவட்டம்  தாம்பரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பெயரிலும் – குப்பைகளை அப்புறப்படுத்துவதிலும் பல கோடி முறைகேடு நடந்துள்ளது – கிரிமினல் நடவடிக்கை எடுப்பது தொடர்பான புகார்…

  காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் நகராட்சியில் கொசு ஒழிப்பு, டெங்கு கொசு விழிப்புணர்வு, டெங்கு கொசு கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் போலியாக பில் போட்டு  பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. இந்த முறைகேடுகளில் தாம்பரம் நகராட்சி தலைவராக இருந்த கரிகாலன், நகராட்சி ஆணையர்களாக இருந்த ரவிச்சந்திரன், பொறுப்பு ஆணையர் பொறியாளர்முருகேசன், மதிவாணன்  மற்றும் அப்போது பணியாற்றிய சுகாதார பிரிவு அதிகாரிகள் தற்போது ஆணையராக இருக்கும் கிருஷ்ணமூர்த்தி  இவர்களுடன் உள்ளாட்சித்துறை அமைச்சரின் உதவியாளர் பார்த்தீபன் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறையின் கூடுதல் இயக்குநர் செபஸ்தியான் ஆகிய அதிகாரிகள் இந்த முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்து, உரிய  கமிசன்/ இலஞ்சத்தை பெற்றுள்ளார்கள்.

 2015 நவம்பர் முதல் 2017 நவம்பர் வரை இரண்டு ஆண்டுகளில் டெங்கு கொசு கட்டுப்படுத்துதல், டெங்கு கொசு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்ற பெயரில் ஒரு கோடிக்கு போலி பில் போட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது..

 இதை தவிர குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ரூ5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ5 கோடி செலவில் குப்பைகளை அகற்றும் போது எப்படி கொசு உற்பத்தியாகும்.

 தாம்பரம் நகராட்சி  2015-2016 ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில்  கொசு ஒழிப்புக்கு முதலில் ரூ5.75 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருத்திய மதிப்பீடு என்ற பெயரில் ரூ5.75 இலட்சம் ரூ12.87 இலட்சமாக உயர்த்தப்பட்டது.

    ஆனால் 15.12.15 முதல் 30.3.216 வரையில் டெங்கு காய்ச்சல் பெயரில் போடப்பட்ட போலி பில்…

 1. 12.15 payment made for 10 tonne Bleaching powder and 30tonne lime powder for north east heavy rain fall Rs 3,92,000/-
 2. 1.16 payment made for Denque breeding checkers for the month of 2015 Rs 3,50,163/-
 3. 1.16 payment made for Denque special work Rs 1,44,000/-
 4. 1.16 payment made for pvt workers utlished in Denque awareness work in vacant lands in tambaram Rs 4,51,440/-
 5. 2.16 payment made for Denque breedy worker for Denque awarenewss work for the month of dec 2015 Rs 5,09,949/-
 6. 3.16 Denque Breeding checkers for the month of jan 2016 awareness programme Rs 4,01,841/-
 7. 4.16 payment made for Denque breeding control workers feb 2016 Rs 3,70,359/-

     ஏழு தேதிகளில் மட்டும் டெங்கு காய்ச்சல் பெயரில் போடப்பட்ட போலி பில்களின் மதிப்பு ரூ27.18 இலட்சம்.

 1. Payment made for workers utilished in Garbage cleaning in vacant lands for the month jan 2016 ல் கொசு ஒழிப்பதற்காக காலியாக உள்ள இடங்களில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றிய வகையில் செலவு ரூ1,17,612. குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ரூ514 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் நிலையில், காலியாக உள்ள இடத்தில் குப்பையை அகற்ற என்று தனியாக போலி பில் போடப்பட்டுள்ளது. ரூ1,17,612க்கு போலியாக பில் போடப்பட்டு, அதிகாரிகள் அனைவரும், அந்தஸ்துக்கு ஏற்றபடி பிரித்துக்கொண்டு உள்ளார்கள்..

  ஆனால் 2015-16 உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை ஒப்புதல் அளித்த வரவு செலவு கணக்கில் anti filaria/anti malaria operation Rs 35,10,416/- கூறப்பட்டுள்ளது. ஆனால்

     2015-16ம் ஆண்டு வரவு செலவு திருத்திய மதிப்பீட்டில் ரூ12.87 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை ஒப்புதல் அளித்த வரவு செலவுக்கு கணக்கும், திருத்திய மதிப்பீட்டிற்கு இடையே  ரூ22.23 இலட்சம்[ரூ35,10,416 – ரூ12.87 இலட்சம் =ரூ22,23,416/-]  முரண்பாடு உள்ளது.  2016-17ம் ஆண்டிற்கு கொசு ஒழிப்புக்கு ரூ15 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வரவு செலவு கணக்கில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கொசு ஒழிப்புக்கு செலவு செய்யப்பட்ட தொகை ரூ27.18 இலட்சம். இதில் குப்பை அகற்றுவதற்கு ரூ372 இலட்சம் பில் தனியாக போடப்பட்டுள்ளது.  2016 -17ம் ஆண்டில் பெரிய அளவில் கன மழை பெய்யாத நிலையில் டெங்கு காய்ச்சல் பெயரில் ரூ27.18 இலட்சம் போலி போடப்பட்டு, முறைகேடு நடந்துள்ளது.

    டெங்கு காய்ச்சல் பெயரில் போடப்பட்ட போலி பில்….

 1. 4.16 payment made for Denque breeding control workers feb 2016 Rs 3,70,359/-இந்த பில் மார்ச் 2016க்குள் பட்டுவாடா செய்தால், 2015-16 ஆண்டில் கொசு ஒழிப்பு பெயரில் அதிக செலவு காட்டினால் சிக்கல் வரும் என்பதால் 2016 ஏப்ரலில் பணம் பட்டுவாடா செய்தது போல், காட்டியுள்ளார்கள்..
 2. 8.16ல் payment made for Denque Breeding control work for the month of july 2016 RS 3,74,653/-

30.9.16 Control work for the month of august RS 4,90,867,  14.10.16 month of September 2016  Rs 5,16,186, 14.10.16 month of October 2016 Rs 4,91,832 and 5.10.16 payment for tipping fees for month august 2016 Rs 9,55,059 இப்படி எந்த பணி தெரியாமல் ரூ24.42 இலட்சம் போலி பில் போடப்பட்டுள்ளது. இதே மாதிரி 2015ம் ஆண்டும் போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     29.7.16ல் நடந்த கவுன்சில் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்க் கொள்ள வீடு, வீடாக சென்று தினசரி கொசுப்புழு உற்பத்தி கலன்களை அப்புறப்படுத்த , கொசு மருந்து தெளிக்க,  2016-17ம் நிதியண்டிற்கு ஒப்பந்த பணியில் தற்காலிக ஊழியர்களை அமர்த்த, கவுன்சில் ஒப்புதல் இன்றி, தலைவர் கரிகாலன் ஒப்புதலுடன் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டதற்கு பின்னேற்பு வழங்கப்பட்டது. இதற்கு ரூ9.80 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 29.7.16ல் 44,432 வீடுகளில் பணியாற்ற தற்காலிக ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் செய்ய, பின்னேற்பு ஆணை அப்ரூவல் செய்யப்பட்டது நிலையில்  ஒரு மாதம் கழித்து தான் ..

தாம்பரம் நகராட்சி 31.8.16ல் நடந்த கூட்டத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் போலி பில்லை பாருங்கள்…

 1. டி.பி.சி பணியாளர்கள் கணக்கெடுப்பு படிவம் 500புக் ஒரு புக்விலை ரூ400 –ரூ2இலட்சம்
 2. விழிப்புணர்வு வண்ண ஸ்டிக்கர் – 44,000  ஒரு ஸ்டிக்கர் விலை ரூ12 –ரூ5.28 இலட்சம்.
 3. விழிப்புணர்வு துண்டு பிரசுரம் -2,0000 ஒன்றின் விலை ரூ3 – ரூ60,000
 4. பொது இடங்களில் நிறுவிட விழிப்புணர்வு பேனர் – 20 –ஒன்றின் விலை ரூ3800 – ரூ76,000
 5. பள்ளிகளில் விழிப்புணர்வு பேனர் நிறுவிட – 54 – ஒன்றின் விலை ரூ900 – ரூ48,600
 6. நில வேம்பு குடி நீர் விழிப்புணர்வு பேனர் – 5 – ஒன்றின் விலை ரூ 450 – ரூ2250
 7. மருத்துவமுகாம் பேனர் – 5 – ஒன்றின் விலை ரூ450 – ரூ2250
 8. காலி மணிகளில் துப்பரவு பணி பேனர்கள் – 5 – ஒன்றின் விலை ரூ450- ரூ2250
 9. டி.பி.சி பணியாளர்கள் வருகை உறுதி செய்யும் ஸ்டிக்கர் – 44000- ஒன்றின் விலை ரூ3/- என 44,000 விலை ரூ1,32,000. ஆக மொத்தம் ரூ10,51,350/- க்கு போலி பில் போடப்பட்டுள்ளது.

போலி பில் ரூ10,51,350/-ம் ஜார்ஜ் டவுன் கூட்டுறவு சொசைட்டி பெயரில் போடப்பட்டுள்ளது…

 டி.பி.சி ஊழியர்களுக்கான ஸ்டிக்கர் அச்சிட 31.8.16ல் ஜார்ஜ் டவுடன் சொசைட்டியில் பணி கொடுத்தால், இவர்கள் சப்ளை செய்ய ஒரு மாதம் ஆகும், அது வரை டி.பி.சி ஊழியர்களுக்கு என்ன வேலை, இதிலிருந்து டி.பி.சி ஊழியர்கள் நியமனமே போலி. டி.பி.சி ஊழியர்கள், நியமனம் என்ற பெயரில் போலி பில் போடப்பட்டு, முறைகேடு நடந்துள்ளது உறுதியாகிறது..

மேலும் 2016 செப்டம்பர் முதல் மார்ச்  2017 வரை ரூ25 இலட்சத்துக்கும், 2017 ஏப்ரல் முதல் நவம்பர் 2017 வரை ரூ20 இலட்சத்துக்கும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தல் என்ற பெயரில் போலி பில் போடப்பட்டுள்ளது. 2015 நவம்பர் முதல் 2017 நவம்பர் வரை இரண்டாண்டுகளில் டெங்கு காய்ச்சல் பெயரில் போடப்பட்ட போலி பில்களின் மதிப்பு ரூ1கோடியை தாண்டும். வருடா வருடம் டெங்கு காய்ச்சல் பெயரில் ரூ30 இலட்சம், ரூ40இலட்சம் செலவு செய்யும் போது, எப்படி டெங்கு காய்ச்சலில் இறப்பு எப்படி ஏற்படும். 2017 நடப்பு ஆண்டில் தாம்பரம் நகராட்சிக்குட்ப்பட்ட பகுதிகளில்  டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலில் 5பேர் பலியாகி உள்ளார்கள்..

     இதைவிட மெகா மோசடி தாம்பரம் நகராட்சியில் குப்பைகளை அகற்ற ஆண்டுக்கு ரூ5கோடி செலவு செய்யப்படுகிறது. தாம்பரம் நகராட்சியின் கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள வார்டுகள் 11 முதல் 27 வரையும், மேற்கு தாம்பரத்தில் வார்டு 10,35,36,32 மற்ரும் ஜி.எஸ்.டி சாலைகளில் குப்பைகளை அகற்றி வரும் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட் தனியார் நிறுவனம் குப்பையை அகற்றும் பணி சரியாக செய்யவில்லை  என்று 16.4.14 முதல் 9.9.15 வரை  14 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட்  குப்பைகளை முழுமையாக அகற்றும் பணியை சரியாக செய்யாத காரணத்தால் 14.1.16ம் தேதி  முதல் சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய, 30.12.15ல் அவசர கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் கவுன்சில் கூட்டத்தின் முடிவு செயல்படுத்தப்படவில்லை. சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனமே [SRINIVAS WASTE MANAGEMENT SERVICES, #6/24, Bharathi Colony Annexe, Kaikankuppam, Alwarthiru Nagar, Valasaravakkam. Chennai – 600 08].தொடர்ந்து குப்பைகளை அகற்றி வருகிறது..

 சீனிவாசா வேஸ்ட் மேனேஜ்மெண்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிட் நிறுவனம் பட்டுவாடா செய்யப்படும் ஒவ்வொரு பில்லிலும் 30 சதவிகிதம் கமிசன் கொடுக்க, பேரம் பேசி, மாதா மாதம் கொடுத்து வருவதால் கவுன்சில் கூட்டம் முடிவை செயல்படுத்தவில்லை..

 தாம்பரம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு, டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துதல் பெயரிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ1 கோடிக்கு போலி பில் போட்டு எடுத்து முறைகேடுகள் செய்துள்ளார்கள்.  அதே போல் குப்பை அகற்றும் டெண்டரிலும் மெகா முறைகேடு நடந்துள்ளது. டெங்கு காய்ச்சல், குப்பைகள் அகற்றுவதிலும் நடந்த முறைகேடுகளால் மட்டும்  2015 நவம்பர் முதல் 2017 நவம்பர் வரை  மட்டும் அரசுக்கு ரூ 4கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

                                                                                                

 

 

 

Comments

comments