தலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் … தி இந்து தமிழ் நாளிதழ் கூட்டணி..எம்.ஜி.ஆர் 100 நெல் ரக மோசடி….

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரும், ஊழல் மன்னன் டாக்டர்கே.ராமசாமிக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் என்றலே பிடிக்காது..தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிகாரிகளை பழிவாங்குவது , மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொள்ளுவது துணை வேந்தர் ராமசாமியின் பொழு போக்கு…ஊழல், முறைகேடுகளுக்கு ஒத்து வரவில்லை என்றால், தண்ணி இல்லா காட்டுக்கு மாற்றிவிடுவார்…பிரதமர் நரேந்திரமோடியே சொன்னாலும் மாற்றமாட்டார்…

  எம்.ஜி.ஆர் 100 புதிய நெல் ரகம், தஞ்சாவூரில் 29.11.17ல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்… எம்.ஜி.ஆர். நெல் ரகம் என்பது மெகா மோசடி.. அந்த நெல் ரகத்தின் பெயர் கோ-52. மத்திய விதைக்குழு அங்கீகரிப்பில் கோ 52 என்ற பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது…2008ம் ஆண்டு ராபி பருவத்தின் போது ஐந்தாம் சந்ததியில் தனிச் செடி ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு, விதைகள் பெருக்கப்பட்டு கோ -52 பெயரிடப்பட்டது.  2013-14, 2014-15ம் ஆண்டில்  விவசாயிகளுக்க் கோ-52 நெல் விதை வழங்கப்பட்டு பயிரிட்டு வருகிறார்கள்.. இந்த கோ-52 நெல் ரகத்தை  ஐ எம்.ஜி.ஆர் 100 நெல் ரகம்  என்ற பெயரில் தமிழக அரசை ஏமாற்றி தஞ்சாவூரில் அறிமுகப்படுத்தி, மெகா மோசடி நடத்தி காட்டினார் கே.ராமசாமி…

 மோசடி நெல் ரக அறிமுகப்படுத்தும் விழாவுக்கு தி இந்து தமிழ் நாளிதழில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் விளம்பரம் கொடுக்கப்பட்டது.  தி இந்து தமிழ் நாளிதழிலை விட பல மடங்கு விற்பனை அதிகமுள்ள பல நாளிதழில்கள் இருக்கும் போது,  தி இந்து தமிழ் நாளிதழில் மட்டும் ஏன் விளம்பரம் கொடுக்க வேண்டும்… என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை…

 பெரியளவில் விற்பனை இல்லாத தி இந்து தமிழ் நாளிதழுக்கு விளம்பரத்துக்கு கொடுக்கப்பட்ட தொகை ரூ12.21 இலட்சம்…

   இந்த ரூ12.21 இலட்சம் யார் அப்பன் வீட்டு பணம்…துணை வேந்தர் ராமசாமியின்  சொந்த பணம் என்றால் நமக்கு கவலை இல்லை…

   தி இந்து தமிழ் நாளிதழில் விளம்பரம் கொடுத்துதான் எம்.ஜி.ஆர் 100 புதிய நெல் ரக வெளியிட வேண்டுமா?… இப்படி ஊழல் பெருச்சாளி, தலித் விரோத துணை வேந்தர் ராமசாமியுடன் கூட்டணி வைக்கும் தி இந்து தமிழ் நாளிதழின் பின்னணியில் இருப்பவர்கள் யார்…

                 விரைவில்…மக்கள்செய்திமையம் வெளியிடும்…

Comments

comments