தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம்-சர்வர் முடங்கி போனதா.. முடக்கப்பட்டதா…குறட்டைவிடும் அரசியல் கட்சிகள்…

தமிழக அரசு அமைச்சர்கள், அதிகாரிகளின் மீதான ஊழலை புகாரை விசாரிக்க, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா Extraordinary gazette publication 2018ல்  379 -13.11.18 part –II –section 1 personnel and Administrative reforms department –Date of coming in to force of the TAMILNADU LOKAYUKTA ACT 2018   என்று உள்ளது.

 379ஐ கிளிக் செய்தால், அரசாணையின் கெசட் வர வேண்டும் . ஆனால் 379 கிளிக் செய்தவுடன் server error – 404 – file or directory not found என்று வருகிறது. கடந்த 15ம் தேதியிலிருந்து இந்த நிமிடம் வரை அப்படிதான் வருகிறது..

 379 server error – 404 – file or directory not found என்று லோக் ஆயுக்தாவை  அரசாணையை/ கெசட் பப்ளிகேசனை தமிழக அரசு ஏன் முடக்கி வைத்துள்ளது.

 லோக் ஆயுக்தா கெசட் நகல் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கையில் கிடைத்தால், உயர்நீதிமன்றம் செல்வார்கள் அல்லது மக்களிடம் விவாதத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று தமிழக அரசு பயப்படுவது வெளிப்படையாக தெரிகிறது.

 தமிழக அரசின் பயத்தை பார்க்கும் போது, லோக் ஆயுக்தா கெசட்டில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளை ஊழல் புகாரை விசாரிக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒட்டையாக இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது.

 தமிழக அரசின் லோக் ஆயுக்தாவில் சட்டம் ஒழுங்காக, ஊழல் ஒழிக்கும் நோக்கத்துடன் இருந்தால் ஏன்  சர்வரை  முடக்க வேண்டும்..

  அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், பத்திரிகைகளும் இதை கண்டுகொள்ளவே இல்லை..

         தமிழகத்தில் லோக் ஆயுக்தா போல்  பத்திரிகைகளும் முடங்கி போய்விட்டதா…

          

 

 

Comments

comments