தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்தின்- ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்த கல்வி வள்ளல் பச்சமுத்து..புத்தகமாக பெரம்பலூர் மக்களிடம்..

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பாரிவேந்தர் பச்சமுத்து அய்யா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான ரூ250கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்ரமித்துள்ளார்.

 திருவள்ளூர் மாவட்டம், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராமாபுரத்தில் சர்வே எண்.134/1ல் 2.28 ஏக்கர் நிலத்தை வள்ளியம்மாள் சொசைட்டி பெயரில் ஆக்ரமித்து, ஈஸ்வரி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.

 2006-11 திமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறையின் அமைச்சராக  ஐ.பெரியசாமி இருந்த போது, வீட்டு வசதித்துறை நிர்வாக இயக்குநராக இருந்த ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மூலம் 2.28 ஏக்கர் நிலத்தை மார்க்கெட் விலைக்கு வாங்க முயற்சி செய்தார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரியத்தின் நிலத்தை பாரிவேந்தருக்கு விற்பனை செய்ய மறுத்துவிட்டார்.

 2011 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைதிலிங்கம், தற்போது அமைச்சராக இருக்கும் ஒ.பன்னீர்செல்வம் இருவரும் பச்சமுத்துடன் கூட்டணி அமைத்தார்கள்.  ஆனால் உயர்நீதிமன்றம் பச்சமுத்து, போட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து, நிலத்தை உடனடியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்த உத்தரவிட்டது. ஆனால் அதிமுக அரசு பச்சமுத்துக்கு ஆதரவாக  செயல்பட்டு, இந்த நிமிடம் வரை ஆக்ரமித்த நிலத்தை கையகபடுத்த நடவடிக்கை எடுக்கவில்லை..

       ரூ250கோடி மதிப்புள்ள தமிழ்நாடு வீட்டு வசதிவாரியத்துக்கு சொந்தமான நிலம் ஆக்ரமிப்பு தொடர்பாக ஆதாரங்களுடன்  மக்கள்செய்திமையம் தனி புத்தகமாக விரைவில் பெரம்பலூர் மக்களிடம்….

  மக்களவைத் தேர்தல் செய்திகளை..makkalseithimaiyam.com உடனுக்கு உடன் பார்க்கலாம்..                

 

 

Comments

comments