தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமா… கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் மடமா…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சத்துணவு முட்டை ஊழல் புகழ் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் கீழ் சிக்கி, ஊழலில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது. ரூ1300கோடி வரி ஏய்ப்பு செய்த, கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனமான SUVARNABHOOMI ENTERPRISES PVT லிமிட் நிறுவனத்துக்கு 6.8.18ல் காசோலை எண்.18456 மூலம் ரூ12.93கோடியும், NATURAL FOODS PRODUCTS நிறுவனத்துக்கு 8.6.18ல் காசோலை எண்.184318 மூலம் ரூ35.15கோடியும் கொடுக்கப்பட்டுள்ளது.

 காசோலை மூலம் இந்த இரு நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்ட பணம் எதற்காக கொடுக்கப்பட்டது, என்ன பொருள் சப்ளை செய்தார்கள் என்ற விவரம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டது.

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பொதுத் தகவல் அலுவலர் கம் பொது மேலாளர்(வாணிபம்) மூன்றாம் நபர் தகவல் என்று தகவல் அளிக்க மறுத்துள்ளார்.

 அரசு ஊழியர்கள், அரசு அதிகாரிகள் தொடர்பாக கேட்கப்படும் விவரங்கள்(சர்வீஸ் புக்) மட்டுமே முன்றாம் நபர் தகவலாகும்.

SUVARNABHOOMI ENTERPRISES PVT லிமிட், NATURAL FOODS PRODUCTS இரு நிறுவனத்துக்கும் கொடுக்கப்பட்ட ரூ47கோடிக்கு என்ன சப்ளை செய்தார்கள் என்று கேட்கப்பட்ட விவரங்கள் எப்படி மூன்றாம் நபர் தகவலாகும் என்று தெரியவில்லை.

 பொது மேலாளர்(வாணிபம்) தகவல் தர மறுத்துவிட்ட காரணத்தை பார்க்கும் போது, ரூ47கோடிக்கு பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் சப்ளை செய்யாமல், பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 தொடர்பாக அ, ஆ தெரியாதா அதிகாரிகளை பொதுத் தகவல் அலுவலராக நியமித்தால்  தகவலும் கிடைக்காது, ஊழல் தான் அதிகரிக்கும்..

Comments

comments

About admin

Check Also

FIR

மாஜி ஊழல் அமைச்சர் திரு.S.P.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு துறையால் FIR போடப்பட்டுள்ளது. Comments comments

Leave a Reply

Your email address will not be published.