தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கம்..

கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி கடந்த 20 ஆண்டுகளாக பினாமி நிறுவனங்களின் பெயரில் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்து வந்தார்..முட்டை சப்ளை  மெகா ஊழல் நடந்துள்ளது. தினமும் ஒரு முட்டைக்கு ரூ1/- என தினமும் ரூ50 இலட்சம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு கமிசன் கொடுக்கிறார். இதை வருமான வரி விசாரணையில் குமாரசாமி ஒப்புக்கொண்டு உள்ளார்.

2018ல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீட்டிலும் சோதனி நடந்தது. கிறிஸ்டி புட்ஸின் பல ஆவணங்கள் சிக்கியது.

 வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய பிறகும், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனங்களான சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட் கோவை, நேச்சரல் புட் புராடக்ஸ் நாமக்கல் ஆகிய இரு நிறுவனங்களும் பல ஆயிரம் டன் நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு சப்ளை செய்துள்ளது.

 துவரம்பருப்பு சில்லறை விற்பனை கடைகளில் அதாவது கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு கிலோ ரூ80க்கு கிடைக்கும் போது, 20,000 டன், ஒரு டன் ரூ76,250க்கு அதாவது ஒரு கிலோ ரூ76.25 விலைக்கு குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள் சப்ளை செய்துள்ளது. துவரம் பருப்பு கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது.

 வருமான வரித்துறை ஏழு நாட்கள் ரெய்டு நடத்தியது. குமாரசாமி விசாரணையில் ரூ1350கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 இந் நிலையில் குமாரசாமியின் பினாமி நிறுவனங்களாக சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிட் கோவை, நேச்சரல் புட் புராடக்ஸ் நாமக்கல் ஆகிய இரு நிறுவனங்களையும் கருப்பு பட்டியலில் வைக்காமல், அந்த நிறுவனங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்படுகிறதை பார்க்கும் போது, கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கத்தின் கீழ்தான் தமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக் கழகம் செயல்படுகிறது என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 

 

Comments

comments