தமிழ்நாடு அரசின் செய்தித்துறைக்கு… மதசார்பின்மைக்கு அர்த்தம் தெரியாதா..

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி  ஜெயலலிதா அவர்களின் நினைவு மண்டபத்திற்கான  அடிக்கல் நாட்டு விழா செய்தி குறிப்பில் செல்வி ஜெயலலிதா நினைவு  மண்டபத்திற்கான யாகம் மற்றும் அடிக்கல் நாட்டு விழா என்று கூறப்பட்டுள்ளது. மேலும் யாகம் காலை 6மணிக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது..

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு அனைத்து மதத்தினரும் வாக்கு அளித்த காரணத்தால் முதல்வரானார். முதல்வரும், அமைச்சர்களும் பதவியேற்கும் போதும், மதசார்பின்மை உறுதி மொழி எடுக்கிறார்கள்..

    Secularism in India means equal treatment of all religions by the state. With the 42nd Amendment of the Constitution of India enacted in 1976, the Preamble to the Constitution asserted that India is asecular nation. However, neither India’s constitution nor its laws define the relationship between religion and state.

  தமிழக அரசின் செய்தித்துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் யாகம் நடப்பதை குறிப்பிட்ட இருக்க கூடாது. யாகம் நடக்கிறது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல்,  இந்த மத கோட்டுபாடுகளின் படி யாகம் நடத்துவதில் தவறில்லை.

 மதசார்பின்மை அரசு, முன்னாள் முதல்வருக்கு நினைவு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டு விழா தொடர்பான யாகத்தில்  முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டார்கள்.  இது தொடர்பான செய்தி குறிப்பில் யாகம் நடக்கிறது என்று குறிப்பிட்டது,  எந்தவிதத்தில் சரி என்பது புரியவில்லை..மதசார்பின்மைக்கு எதிராக செய்தி குறிப்பு இருக்கிறதே என்று அதிகாரிகள் கவலைப்படவில்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது..

 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வாக்களித்து வெற்றி பெற வைத்து, முதல்வராக செல்வி. ஜெயலலிதா தொடர காரணமாக இருந்த வாக்காளர்கள் அனைத்து மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பதை தமிழக அரசின் செய்தித்துறை எப்படி மறந்தது..

               செய்தித்துறை அதிகாரிகள் செய்தி குறிப்பு அனுப்புவதில், அலட்சியமாக இருப்பதால், பல பிரச்சனைகளுக்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது…

Comments

comments