தமிழகத்தில்….ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை- காப்பாற்றிய பாஜக அரசு…

பாஜக ஊழல் ஒழிப்பு, கருப்பு பணம் ஒழிப்பு இரண்டையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி, மத்தியில் ஆட்சி அமைத்தது. தமிழக அரசில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஊழலை ஆதாரங்களுடன் மத்திய அரசின் Department of personnel & training செயலாளருக்கு ஆதாரங்களுடன் அனுப்பிய புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊழல் அதிகாரிகளை காப்பாற்றியதோடு, தமிழக அரசின் செயல்பாடுகளை  பாஜக அரசுக்கு உளவு சொல்லும் (inform’ant)அதிகாரிகளாக மாற்றி தன் பக்கம் வைத்துக்கொண்டது.

  1. 9.5.15ல் மாவட்ட ஆட்சித் தலைவர்களாக பணியாற்றிய சுப்ரமணியன் ஐ.ஏ.எஸ், ஜெயந்தி ஐ.ஏ.எஸ், கணேஷ் ஐ.ஏ.எஸ், தட்சணாமூர்த்தி ஐ.ஏ.எஸ் மீது மத்திய அரசின் Department of personnel & training செயலாளருக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பியது.

 இந்த புகாரின்  பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு 12.6.15ல் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியது..

  1. 6.6.15ல் டாக்டர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் மற்றும் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் மீது ஆதாரங்களுடன் புகார் அனுப்பப்பட்டது. வழக்கம் போல் 20.10.15ல் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது.
  2. 13.6.15ல் கே.ஸ்கந்தன் ஐ.ஏ.எஸ் மற்றும் ஹன்ஸ்ராஜ்வர்மா ஐ.ஏ.எஸ் மீது ஆதாரங்களுடன் அனுப்பிய புகாரின் பேரில், தலைமைச் செயலாளருக்கு வழக்கம் போல் 5.7.15ல் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தது.

 மத்திய அரசின் Department of personnel & training செயலாளர் பரிந்துரையின் படி தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை மூன்றாண்டுகளில் நான்கு கடிதங்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் Department of personnel & training செயலாளருக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால் அந்த கடிதங்களுக்கு எந்த பதிலும் இல்லை.

 ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கமால், ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசின் செயல்பாடுகளை உடனுக்கு உடன் தெரிவிக்கும் உளவு சொல்லும் அதிகாரிகளாக மாற்றி, தன் பக்கம் வைத்துக்கொண்டது பாஜக அரசு..

 தமிழக அரசின் செயல்பாடுகளை 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய அரசுக்கு உளவு சொல்லி வருகிறார்கள்… ஆனால் தமிழக அரசின் உளவுத்துறை குறட்டை விடுகிறது..

 

 

 

 

 

 

Comments

comments