தமிழகத்தின் அச்சாணி – கலைஞர் கருணாநிதி- நலம் பெற வேண்டும்…

தமிழகத்தின் அச்சாணியும், திமுக தலைவரும், முன்னாள் முதல்வரும், மூத்த பத்திரிகையாளருமான கலைஞர் கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல், காவிரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்..கலைஞர் நலம் பெற்றும் வீடு திரும்ப வேண்டும் என்று மக்கள்செய்திமையம் விரும்புகிறது..

 1977 பிப்ரவரி 18ம் தேதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் அதிகாரப் பொறுப்பு கைவிட்டுப் போகக் கூடாது என்பதிலும் அல்லது போய்விட்டதை எப்படியும் பற்றியே தீர வேண்டும் என்பதிலும் மட்டுமே அக்கறை காட்டும் ஒரு நாட்டில் சர்வாதிகார ஆட்சி இருப்பினும், ஜனநாயக ஆட்சி இருப்பினும் நிலைமை ஒன்றேதான்!

 ஆனால் ஜனநாயகத்தில் வாய் திறந்து ’அய்யோ பசிக்குதே!” என்ற கூவ முடியும்! சர்வாதிகார ஆட்சியில் அதற்கும் வாய் திறக்க முடியாது!காரணம் தலையிருந்தால் அல்லவா வாய் திறப்பதற்கு?

 இந்த வரிகளை கடந்த சில நாட்களாக பல முறை படித்துவிட்டேன்…இந்த வரிகளை இப்போது நினைவுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது..

   1971 சட்டமன்றத் தேர்தலில் இலால்குடி தொகுதியில் வெ.ந.முத்தமிழ்செல்வனுக்காக 10வயது நிரம்பாத நிலையில், கலைஞர் படம் ஒட்டிய குச்சியை கையில் ஏந்தியபடியே வீடு, வீடாக உதயசூரியனுக்கு ஒட்டு போடுங்க, வாக்கு கேட்ட என்னால், கலைஞர் உடல் நிலை சரியல்லாத நிலையை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை..இரவு முழுவதும் தலையணை கண்ணீரால் நனைந்துவிடுகிறது…

  தமிழகத்தின் அச்சாணி தலைவர் கலைஞர் கருணாநிதி நலம் பெற வேண்டும் என்று திமுக தொண்டனாக விரும்புகிறேன்….

                                                                                                                                                                         வி.அன்பழகன்

                                                                                                                                                           மூத்த பத்திரிகையாளர்

                                                                                       

 

 

 

 

Comments

comments