டாமின் திவாலாவா…ஊழல் அதிகாரி வெங்கடேசனுக்கு பதவி உயர்வு-மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் சாதனை…

டாமின் நிர்வாக இயக்குநராக வள்ளலார் ஐ.ஏ.எஸ் பணியாற்றிய போது, வள்ளலாரின் ஊழல் சாதனையால் டாமின் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, டாமின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டு வருகிறது.

 டாமின் நிர்வாக இயக்குநராக மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் இருந்தாலும், பின்னணியில் டாமினை இயக்குவது வள்ளலார் ஐ.ஏ.எஸ்தான்.. டாமின் துணை மேலாளர் வெங்கடேசன், ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் தலைவர்..வெங்கடேசனுக்கு 9.4.13ல் குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது. அந்த குற்றச்சாட்டு குறிப்பாணையில் வெங்கடேசன் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள் 64 என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 வெங்கடேசன் மீது ஜனனி மினரலஸ் திருச்சி, எவரெஸ்ட் எண்டர்பிரைசஸ், கருணை கிரானைட்ஸ் பிரைவேட் லிமிட் ஆகிய நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு குறிப்பாணை கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்த குற்றச்சாட்டுகளுக்கு வெங்கடேசன் கொடுத்த பதில், திருப்தியாக இல்லாத காரணத்தால், பதவி உயர்வு கொடுக்கப்படவில்லை. ஆனால் ஊழல் அதிகாரி வெங்கடேசன் டாமினில் அதிகாரமையத்தில் வலம் வருகிறார்..

  மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ்க்கு வள்ளலார் ஐ.ஏ.எஸ் வெங்கடேசனுக்கு பொது மேலாளர் பதவி உயர்வு கொடுங்கள்.. குற்றச்சாட்டு குறிப்பாணை கோப்புக்கு மூடுவிழா நடத்துங்கள் என்று நெருக்கடி கொடுக்கிறார்..

 ஊழல் அதிகாரி வெங்கடேசனுக்கு பதவி உயர்வு கொடுக்க, மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ் முயற்சி செய்கிறார்..

 வள்ளலார் ஐ.ஏ.எஸ் டாமினில் நடத்திய ரூ100கோடி ஊழலை, வெங்கடேசனுக்கு பொது மேலாளர் நிர்வாகம் பதவி உயர்வு வாங்கி கொடுத்து, ஊழல் கோப்பை அழிக்க முயற்சி செய்கிறார்..

 டாமின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டவில்லை.. ஆனால் ரூ100கோடி ஊழல் செய்த வள்ளலார் ஐ.ஏ.எஸ் உடன் கூட்டணி அமைத்து, ஊழல் அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுக்க முயற்சி செய்கிறார் மகேசன் காசிராஜன் ஐ.ஏ.எஸ்

  டாமின் நிறுவனத்தின் ரூ200கோடி ஊழல் தொடர்பாக மக்கள்செய்திமையம் ஊழல் தடுப்பு  மற்றும் கண்காணிப்பு இயக்குநருக்கு ஆதாரங்களுடன் புகார் அனுப்பி உள்ளது..

 

 

Comments

comments