ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் & அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ் சஸ்பெண்ட் – தாது மணல் நிறுவனத்திற்கு ஆதரவாக அறிக்கை அளித்த கனிம வளத்துறை உதவி இயக்குநர்கள் உட்பட பலர் சஸ்பெண்டர்…ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு.

IN02_K_GNANADESIKA_2230325eAtulAnand_Large

மிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி இல்லாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் தமிழகத்தில் தாது மணல் அள்ளப்பட்டதால் பல்லாயிரங்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு வர வேண்டிய தொகை சில நபர்களுக்கு மொத்தமாக சென்று தங்களுடைய வருவாயை பெருக்கி கொண்டு அரசாங்கத்தை ஆட்டிபடைக்கும் சக்தியாக வி,வி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் தாது மணல் அள்ளப்பட்டதால் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, தாது மணல் அள்ளுவதில் முறைகேடாக நடப்பதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஆஷீஷ்குமார் ஐ.ஏ.எஸ், தமிழக அரசுக்கு அனுப்பிய புகாரை தொடர்ந்து  தமிழக அரசு கடந்த 2013 ம் ஆண்டு தமிழகத்தில் தாதுமணல் அள்ள தமிழக அரசு தடைவிதித்தது. இதனை ஆய்வு செய்ய அப்போதைய வருவாய் துறை செயலாளராக இருந்த சுகன்சிங்பேடி ஐ.ஏ.எஸ்  தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு கடலோர பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுகன்சிங்பேடி ஐ.ஏ.எஸ் அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்ட்து. ஆனால் அந்த அறிக்கையின் செயல்படுத்த, உரிய ஆணைகள் தமிழக அரசு வெளியிடவில்லை. ஆனால் தமிழக அரசு தடைவிதிக்கப்பட்ட பின்பும் கூட கடலோர பகுதிகளில் அரசு அதிகாரிகளின் துணையுடன் தாது மணல் அள்ளப்பட்டு, வெளி நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இறுதியில் தட்டார்மடம் பகுதியில தாதுமணல் அள்ளப்பட்ட மூன்று லாரிபறிமுதல் செய்யப்பட்டது. இம்மாதம் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி சப்கலெக்டர் ராதாபுரம் பகுதியில் தாதுமணல் அள்ளப்பட்ட மூன்று லாரிஒரு ஜே.சி.பி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுவந்தது. வைகுண்டராஜனின் சகோதரர்குமரேசன் சில மாதங்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளராக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்யிடம் 29 பக்கம் கொண்ட புகார் ஒன்று அளித்தார். மேலும் தாதுமணல் அள்ள தடைவிதித்த பிறகும், தாது மணல் அள்ளப்பட்டு, அதற்கு டிரான்ஸ்போர்ட் பர்மிட் கொடுக்கப்பட்டு, தாது மணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது தொடபாக, வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.   வைகுண்டராசன் தம்பி குமரேசன் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் உள்ள வழக்கின் அடிப்படையிலும்  நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள், வனஅலுவலர்கள், மாசுகட்டுப்பாடு வாரியத்தின் அதிகாரிகள் மற்றும்  தாசில்தார் உள்பட அதிகாரிகள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு தாதுமணல் ஏற்றுமதி செய்கின்ற நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பபட்டு அந்தந்த நிறுவனங்களிடம் அறிக்கை பெறப்பட்டது. அதன் பிறகு அந்தந்த பகுதி தாசில்தார்கள் தாதுமணல் இருப்பு வைக்கப்பட்டுள்ள குடோன்களுக்கு சென்று சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் தாதுமணல் இருப்புள்ளதா என்று ஆய்வு செய்ய உத்திரவிடப்பட்டிருந்தது. அதன் படி நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் தாலுகாவில் ஆய்வு செய்து அதன் அறிக்கை அளித்த அப்போதைய ராதாபுரம் தாசில்தார்அறிக்கைக்கு பின்பு மானூர் தாலுகாவிற்கு மாற்றப்பட்டார். வைகுண்டராஜனுக்க அதரவாக அளித்த கமிட்டி ரிப்போட் தவறு என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் முடிவு செய்த காரணத்தால், தாசில்தார் மாற்றப்பட்டார். அதுபோல தூத்துக்குடி தாலுகாவில் தாசில்தர் சங்கர நாராயணன் தலைமையில் தாதுமணல் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக அறிக்கை அளிக்கப்பட்டது.  சிப்காட் பகுதியில் தங்கமாரியப்பனுக்கு சொந்தமான சசின் பெயரில் உள்ள குடோனில் 7500 டன் கார்னேட் மணல் உள்ளது. இந்த குடோனை தாசில்தார் சங்கரநாராயணன் ஆய்வு செய்யவில்லை. அதுபோல சிப்காட் வளாகத்திற்குள் உள்ள எர்த் மினரல்ஸ் தாதுமணல் குடோனை தாசில்தார் சங்கரநாராயணன் ஆய்வு செய்யாமல் அறிக்கை அளித்துள்ளார். தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழக அரசை தாதுமணல் அதிபர் வைகுண்ட ராஜன் ஆட்டிபடைத்து வருகிறார் என்பது உண்மை.

   தமிழக உயர்அதிகாரிகள் அனைவரும் வைகுண்டராஜனிடம் மாமூல் வாங்கும் நபர்களாகவே உள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு கனிம வளத்துறை உதவி இயக்குநா;கள் தாதுமணல் நிறுவனத்திற்கு ஆதரவாகவே அறிக்கை அளித்துள்ளார்கள். இதன் பிண்ணனி மத்திய சுற்றுசுழல்துறை அதிகாரியாக இருந்த கலியபெருமாள், வைகுண்டராஜனுக்கு நண்பர். . கலியபெருமாள் ஸ்பிக் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து வைகுண்டராஜனுக்கு ஆதரவாக அறிக்கை தயார் செய்து கொடுத்தார். அதன் படி முன்பு நெல்லை மாவட்டத்தில் உதவி இயக்குனராக இருந்த கோவிந்தராஜன், திண்டுக்கல் மாவட்ட உதவி இயக்குநராக இருக்கும் செல்வசேகரன் நெல்லைமாவட்ட உதவி இயக்குநர் சகாயசீலன், மதுரை மாவட்ட உதவி இயக்குநர் ஆறுமுக நயினார், தூத்துக்குடி மாவட்ட உதவி இயக்குநர் கிருஷ்ண மோகன்  மற்றும் தமிழக கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ், முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ் சுரங்கத்துறை இணை இயக்குநர்கள் கண்ணன், கந்தன்,  சொக்கலிங்கம்  ஆகிய அதிகாரிகள் வைகுண்டராஜனுக்கும், தாது மணல் கடத்தும் கும்பலுக்கும் விசுவாசமாகவும் தமிழக அரசுக்கு குழிபறிக்கும் அதிகாரிகளாகவே செயல்பட்டார்கள்.  29.08.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாதுமணல் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது வனத்துறை சட்டத்தின் படி சில தவறுகளை அதிகாரிகள் செய்து வைகுண்டராஜனுக்கு ஆதரவாக இருந்ததால் தமிழக அரசு வழக்கறிஞர், வாய்தா வாங்கிவிட்டார். இதை தொடர்ந்து தமிழக அரசு, வைகுண்டராசனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், சுரங்கத்துறை இயக்குநர் அதுல் ஆனந்த் ஐ.ஏ.எஸ்  மற்றும் உதவி இயக்குநர் கள் மூவர் 29.8.16ல் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. தமிழகத்தில் வைகுண்டராஜனுக்கு 50 க்கும் மேற்பட்ட தாதுமணல் அனுமதி பெற்றுள்ளார்.  IOGS நிறுவனத்திற்கு ஒன்று மாணிக்கம் மருமகன் தங்கராஜ் பெயாpல் ஒன்று குட்டத்தில் பி.எம்.சி. நிறுவனத்திற்கு ஒன்று டிரான்ஸ்வோர்டு நிறுவனத்திற்கு ஒன்று நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா நவல்டி கிராமத்தில் சர்வே எண் 23 முதல் 90 வரை பட்டா நிலம் மற்றும் புறம்போக்கு நிலத்தில் சுமார் 90 ஏக்கார் பரப்பளவு தாதுமணல் விதிமுறைகளை மீறி அள்ளப்பட்டுவருகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் முருகனேரி கிராமத்தில் புல எண் 83/1, 91/2  என்ற சர்வே எண்ணில் 1.47.0,  1.99.0 ஆகிய ஹெக்டர் இடம் அதுபோல கோபாலபுரம் கிராமத்தில் புல எண் 45/2 A,  யில் 1.56.0 ஹெக்டேர் புல எண் 42/2 B 0.02 ஹெக்டேர், புலஎண் 45/3 11.58 ஹெக்டேர் இடத்தில் விவி. மினரல் நிறுவனத்திற்கு கார்னேட் மணல் எடுத்துக்கொள்ள 28.02.2006 முதல் 27.02.2036 வரை தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் வேடிக்கை என்னவென்றால்  45/2 A 42/2 B, 45/3 ஆகிய சர்வே எண்கள் கொண்ட இடம் அரசு தமிழ்நாடு என்றுள்ளது. சா;வே எண் 83/1, 91/2 ஆகிய இடமும் அரசு தமிழ்நாடு என்று தான் உள்ளது. ஆனால் இன்று வரை தாதுமணலுக்கு தடைசெய்யப்பட்டும் தமிழக அரசு வழங்கிய அனுமதியை ரத்துசெய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு கிராமத்தில் சா;வே எண் 124/1 B   5 ஹெக்டேர் நிலத்தில் 06.02.2002 முதல் 05.02.2032 வரை கார்னேட்,  இலிமினேட்டைசுரவடைந  ஆகிய தாதுமணல்கள் பீச் மினரல்   நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 08.08.2013 முதல் No Transport Permit is issued, வைப்பார்  கிராமத்தில் சர்வே நம்பர் 1018/4, 1019/3, 1019/4, 1020/1, 1020/2 ஆகிய சர்வே எண்களில் உள்ள 4.06 ஹெக்டேர் இடத்தில் 4.05.2006 முதல் 03.05.2036 வரை கார்னேர் இல்மினேட், ரூட்டைல் அள்ள விவி மினரல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் தாலுகா மாதவன் குறிச்சி கிராமத்தில் சர்வே எண்கள் 393, 394/1, 394/2, 395/2, 397/1டி, 404/1, 390/1 C2A 390/11C2B, 390/1 C2D 390/6, 390/4 , 390/9  ஆகிய சர்வே எண்கள் கொண்ட பகுதிகளில் டிரான்ஸ்போர்ட்  கார்னேட் நிறுவனத்திற்கு கார்னேட் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.1 2

  விளாத்திகுளம் தாலுகா பெரியசாமிபுரம் கிராமத்தில் சர்வே எண் 62, 63, 86, 87 உள்பட 33 சர்வே எண்கள் கொண்ட 36.66 ஹெக்டேர் இடத்தில் கார்னேட், இல்மினேட், ரூட்டைல் மணல் எடுக்க 04.10.2011 முதல் 3.10.2031 வரை அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த சர்வே எண்கள் கொண்ட இடத்திலிருந்து மணல் எடுத்துக்செல்ல போக்குவரத்து அனுமதி வழங்கப்படவில்லை. வைகுண்டராஜனுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு அதிகாரிகள், தாது மணல் எடுக்க தடைவிதிக்கப்பட்டதற்கு முன்பு டிரான்ஸ்போர்ட் பர்மிட் கொடுத்துள்ளார்கள்.

 தாது மணல் அள்ள, தடைவிதித்த பிறகு, போலியானதாது மணல் டிரான்ஸ்போர்ட் பர்மிட் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எப்படி என்பது தொடர்பான விசாரணயில் சிக்கியதால்தான் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ், அதுல் ஆனந்த ஐ.ஏ.எஸ் உட்பட பலர் சஸ்பெண்ட் ஆகி உள்ளார்கள்.

 30.8.16ல் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டேவிதார் ஐ.ஏ.எஸ் தலைமையில், தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ்யை சந்தித்து பேசினார்கள். 1.9.2016(இன்று) மாலை, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம், தமிழக அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

 மக்கள்செய்திமையம் 1.9.2016 காலை 5மணி

 

Comments

comments