ஜெ வளர்ப்பு மகன் திருமணத்தை விட-அமைச்சர் பென்ஜமின் மகன் திருமணம்..ரூ50கோடியில் ஆடம்பர திருமணம்..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 7.9.1995ல் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன்  திருமணத்தை 75 ஏக்கரில் பந்தல் போட்டு, மிகவும் ஆடம்பரமாக நடத்தினார். அந்த திருமணமே 1996 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

  முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயரும், ஊரக தொழில்துறை அமைச்சருமான பா.பென்ஜமின் மகன் விஜய்பெர்லின் திருமணம் வானகரம் ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில், ஜெயலலிதா வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன் திருமணத்தைவிட மிகவும் ஆடம்பரமாக  சுமார் ரூ50கோடி செலவில் நடைபெற்றது.. சுமார் 10கிமீ தூரத்துக்கு, இரண்டு புறமும் கட் அவுட், பிளக்ஸ் பேனர் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு இருந்தது..

  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பல லட்சத்துக்கு போலி பில் போடப்பட்டது. அனைத்துத்துறை அரசு அதிகாரிகளும், திருமண மொய்க்கு பணத்தை வாரி கொட்டினார்கள்..

 ரூ50கோடியில் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்ற அமைச்சர் பென்ஜமின் மகன் திருமணத்தை, மக்கள் நடமாடாத முடியாத அளவிற்கு 10கிமீட்டருக்கு வைக்கப்பட்டு இருந்த கட் அவுட், பிளக்ஸ் போர்டுகளை எதிர்கட்சியான  திமுகவின் கலைஞர் டிவி மற்றும் சன் டிவியில் விமர்சனம் செய்யப்படவே இல்லை.. ஏனென்றால் அந்த பகுதி பத்திரிகையாளர்கள் பணத்தில் மிதந்தார்களாம்…

 

 

Comments

comments