ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில்- கொலை கொள்ளை…கூலிப்படையினர் கோவை சிறையில் என்னுடன் பேசிய உண்மை தகவல்..வெளிவராத தகவல்கள் விரைவில் புத்தகமாக…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் 24.4.17 நள்ளிரவு 1.30க்கு நடந்தது என்ன.. ஜெயலலிதாவின் டிரைவர் எடப்பாடி கனகராஜ் பின்னணியில் சயன், மனோஜ் தலைமையில் சந்தோஷ், சதீஷ், தீபக், சிபு உள்ளிட்ட 11 பேர்க்கொண்ட கூலிப்படை கொடநாடு எஸ்டேட்டில் நடத்திய கொள்ளை – காவலாளி ஒம்பகதூர் கொலை- ஏப்ரல் 28ம் தேதி டிரைவர் கனகராஜ், விபத்து மூலம் கொலை-  கொடநாடு எஸ்டேட் கணனி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை-  தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் (ஒய்வு) டிரைவர் படப்பை ரவிச்சந்திரன் விபத்து மூலம் கொலை- சயனுக்கு விபத்து…சயன் மனைவி வினுப்பிரியா,குழந்தை நீது பலி..

 இப்படி பல அதிர்ச்சியூட்டு செய்திகளை நான் 23 பொய் வழக்குகளில் பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு  கோவை சிறையில் இருந்த போது, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை கூலிப்படையினர் என்னிடம் பல நாட்கள் பேசினார்கள்.. மனோஜ் பல உண்மைகளை புலம்பினார்..

 கோவை சிறை நிர்வாகத்தின் ஒப்புதலின்படி, கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை கூலிப்படையினரின், வாக்குமூலங்களை மொழி பெயர்த்து, நீதிபதியிடம் கூறினேன்…

 மனோஜ் புலம்பலில்…3கிலோ தங்க பிள்ளையார் சிலை உள்ளிட்ட பல கடவுள் சிலைகள் 16 என்ணிக்கை, முதல்வரின் பூஜை அறையில் இருந்தது.  அதை எடுத்துக்கொண்டு வந்தோம், மூன்று சிலைகளை ஏரியில் போட்டுவிட்டோம்.. மீதி 13 தங்க சிலைகள் எங்கே போனது…

   மூத்த அமைச்சரின் ரூ3500கோடி மதிப்புள்ள பினாமி பத்திரங்கள், லாக்கிரில் இருந்தது, அதை உடைத்து எடுத்து வந்தோம்.. அதை கனகராஜ் வாங்கிக்கொண்டார்.. அந்த பினாமி பத்திரப்பிரச்சனையில் கனகராஜ் கொலை செய்யப்பட்டரா…

 ராம்மோகன்ராவ் டிரைவர் படப்பை ரவிச்சந்திரன் விபத்தில் மரணமா..விபத்து கொலையா?

 கொடநாடு கணனி ஆபரேட்டர், முதல்வர் தினே என்று அழைக்கும் தினேஷ் தற்கொலை ஏன்..

 இப்படி பல அதிர்ச்சியான தகவல்களுடன்…

                         விரைவில் புத்தக வடிவில் …

 

Comments

comments