செய்தி துறையா..மோசடி துறையா..ஊடகம் அங்கீகார அட்டை விலை ரூ15,000/-சத்யா DTPக்கு வாங்க.. சித்திக் பாயை பாருங்க…

செய்தி துறைக்கு..ஊழல் துறை..மோசடி துறை…புரோக்கர் துறை என பல பெயர்கள் கிடைத்துள்ளது.. அதனால் செய்தித்துறைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடலாம்..

 திருவல்லிக்கேணி அஞ்சல் நிலையம் எதிரே சத்யா  DTP உள்ளது. அங்குதான் ஊடக அங்கீகார அட்டை விலைக்கு வாங்கி தரப்படுகிறது. சத்யா DTP நிலையத்தில் சித்திக் பாய் ஆல் இன் ஆல்..

  பாரத அன்னை புரட்சித் தலைவி என்ற நாளிதழ் அதிமுக தலைமை கழகத்தில் போட்டோகிராபராக இருக்கும் சுரேஷ் நடத்துகிறார். தற்போது சுரேஷ் அதிகமாக அதிமுக தலைமை கழகத்திற்கு வருவதில்லை, தன்னுடைய உதவியாளர் கம் சப் –எடிட்டர் சந்திரசேகர்தான் போட்டோ எடுத்து வருகிறார்.

 பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழுக்கு 2017லிருந்து ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு நான்கு பேருக்கு ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழில் வருவதில்லை..

 சுரேஷ், டாக்டர் புரட்சித் தலைவி என்ற மாதமிருமுறை பத்திரிகை ஆர்.என்.ஐ டைட்டில் வாங்கி உள்ளார். ஆனால் பத்திரிகை வருவதில்லை.. மூன்று பிரஸ் பாஸ் கொடுக்கப்பட்டு வருகிறது.

  விற்பனைக்கு மட்டுமல்ல, பி.ஆர்.ஒ அலுவலகத்துக்கு கூட வராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ், டாக்டர் புரட்சித் தலைவி மாதமிருமுறை இதழுக்கும் தமிழக அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது..

 புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழின் ஊடகம் அங்கீகார அட்டை செய்தி வெளியானதும், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ அலுவலகத்தில் விவாதம் நடந்தது..பி.ஆர்.ஒ சார்.. உண்மையான அடையாள அட்டைதான்.. ஆதாரம் வெளியிடவா…

 செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் டாக்டர் பி.சங்கர் ஐ.ஏ.எஸ் அய்யா என்னதான் செய்கிறார்….நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்…               தொடரும்…

இந்த பதிவு தொடர்பாக ஆதரவாகவும், எதிர்த்தும் பல கருத்துக்கள் வெளியாகியது.  2013ல் ஆர்.என்.ஐ பெற்ற நாளிதழ் 2014 வரை ஊடகம் அங்கீகார அட்டை வாங்கவில்லை..வெளிவராத பாரத அன்னை புரட்சித் தலைவி நாளிதழ் 2.2.19 தேதியிட்ட பி.டி.எப் வெளியாகி உள்ளது..

 

 

                                

 

 

Comments

comments