செய்தி துறையா..ஊழல் துறையா..அரசு அடையாள அட்டை ரூ15,000க்கு விற்பனை..

தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையிலிருந்து நாளிதழ் மற்றும் டிவி மீடியாக்களுக்கு அரசின்   ஊடக அங்கீகார அடையாள அட்டை(ACCREDITATION CARD) வழங்கப்படுகிறது. வார, மாத, வாரம் இருமுறை, மாதம் இருமுறை பத்திரிகைகளுக்கு பிரஸ் பாஸ் வழங்கப்படுகிறது.

 ரவுடி பினு பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்டு, கைது செய்யப்பட்ட 70க்கு மேற்பட்ட ரவுடிகளில் மூன்று பேரிடம் தமிழக அரசின் பிரஸ் பாஸ் இருந்தது(இதன் நகல் நம்மிடம் உள்ளது). செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் தலைமைச் செயலக அலுவலகத்தில் ஊடக அங்கீகார அட்டையின் விலை ரூ15,000 முதல் ரூ20,000/- & பிரஸ் பாஸ் அடையாள அட்டை ரூ5000 முதல் ரூ8,000/- வரை கூவி, கூவி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 அங்கீகாரம் தரப்படாத ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு HEAD LINES MEDIA NETWORK ஆன்லைன் சேனலில் கேமிரா மேன் கார்த்திக் என்பவருக்கு ஊடக அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2019லும் கார்த்திக்குக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது( எண்.0470)..

அங்கீகாரம் கொடுக்கப்படாத ஆன்லைன் சேனலுக்கு  அடையாள அட்டை எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தவுடன், 2019ல் கொடுக்கப்பட்ட ஊடக அங்கீகார அடையாள அட்டையை திரும்ப வாங்கிவிட்டோம் என்று செய்தித்துறை அதிகாரிகள்  பதில் சொல்லுகிறார்.

 2018ல் கொடுத்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.. இந்த வருடம்(2019) புதுப்பித்து கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது..

  இந்த வருடம்(2019) கொடுக்கப்பட்ட ஊடக அங்கீகார அடையாள அட்டையில் 32 பேர் வெளி வராத நாளிதழில் பணியாற்றுபவர்கள், தகுதி இல்லாத, அங்கீகாரம் இல்லாதவர்கள்..32 பேர் பட்டியலில் மக்கள்செய்திமையத்திடம் உள்ளது. இதில் பல பேர் பி.ஆர்.ஒ, துண இயக்குநரிடம் ரூ10,000 முதல் ரூ15,000 வரை இலஞ்சம் கொடுத்து வாங்கி உள்ளார்கள்..

 மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ள இலவச பேரூந்து அடையாள அட்டையில்  மெகா ஊழல் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஊழல் தான் முதலிடம் வகிக்கிறது.

  ரவுடிகளில் ஒருவருக்கு இந்த வருடம் பிரஸ் பாஸ் புதுப்பிக்கப்பட்டுள்ளது..

 பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் ஊடக அங்கீகார அடையாள அட்டை, பி.ஆர்.ஒ. உதவி பி.ஆர்.ஒ முதல் கூடுதல் இயக்குநர் வரை கொடுக்கப்பட்டுள்ளது எப்படி..

  ACCREDITATION CARD குழு அமைக்கப்படாமல், புதிய ஊடக அங்கீகார அட்டை கடந்த ஐந்தாண்டு காலமாக வழங்கப்பட்டது தொடர்பாக மக்கள்செய்திமையம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.

 

   

  

 

                         

 

Comments

comments