செய்தி துறையா .. ஊழல் துறையா…சங்கர் ஐ.ஏ.எஸ் “Phony”யா..பி.ஆர்.ஒ சயிக்முகமது புலம்பல்…

செய்தி துறையா..ஊழல் துறையா என்று ஆதாரங்களுடன் இரண்டு செய்தி வெளியானவுடன், தலைமைச் செயலகத்தின் பி.ஆர்.ஒ சயிக்முகமது, மக்கள் பெயரில் வெளிவரும் பத்திரிகை நிருபர் உள்ளிட்ட மூன்று நிருபர்களிடம் மக்கள்செய்திமையத்தின் சிலைடை காட்டி, கார்த்திக் அடையாள அட்டை 2018ம் ஆண்டில் கொடுக்கப்பட்டது. தன் அடையாள அட்டையை எடுத்து காட்டினார்.. கலர் மாறியிருக்கு பாருங்க..பி.ஆர்.ஒவின் அடையாள அட்டையில் ஊடக அங்கீகார அட்டை என்று இருந்தது..

 சார்.. சிலையை சரியாக பாருங்க..2019ம் ஆண்டு ஊடக அங்கீகார அட்டையின் எண் போடப்பட்டியிருக்கு என்றவுடன், செய்தியை முழுமையாக படித்துவிட்டு அசடு வழிந்தார்..அமைச்சர் கூப்பிட்டு, கார்த்திக்கு ஊடக அங்கீகார அட்டை கொடுங்கள் என்று உத்தரவிட்டார்.. என்ன செய்வது.. இயக்குநரை கேட்டேன் பதில் சொல்லவில்லை. துணை இயக்குநர் சுப்ரமணியத்தை கேட்டேன், ஆன் லைன் மீடியா என்று முணு, முணுத்தவாறு கொடுக்க உத்தரவிட்டார்..

 எனக்கு உயர் அதிகாரி இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ் இல்லை சார்.. அமைச்சர் தான் எனக்கு உயர் அதிகாரி, அமைச்சர் சொல்வதைதான் கேட்பேன்.. செய்தித்துறையில் அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை சார் என்று புலம்பினார்.. என் படத்தை போட்டு இருக்கலாம்.. இயக்குநர் படத்தை ஏன் போட்டார் என்று தெரியவில்லை. ஒரு நிருபர் எனக்கு வாழ்த்து தெரிவித்தார் இந்த படத்தை போட சொல்லுங்க..சார்.. எனக்கு விளம்பரம் கிடைக்கும் என்று புலம்பினார்..

 செய்தி துறை இணைய தளத்தில் 2014ம் ஆண்டுக்கு பிறகு ஊடக அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டவர்கள் பட்டியல் இடம் பெறவில்லை. பிரஸ் பாஸ் பட்டியல் 2013ம் ஆண்டுக்கு பிறகு இடம் பெறவில்லை..

 செய்தி துறையில் ஊழல் நடக்கவில்லை.. ரவுடிகளுக்கு அடையாள அட்டை கொடுக்கவில்லை என்றால், இணையதளத்தில் 2019 வரை ஊடக அங்கீகார அட்டை, பிரஸ் பாஸ் பெற்றவர்களின் பட்டியலை வெளியிடுங்கள்..

 மூன்று ஆண்டுகளாக வெளிவராத ஆங்கில நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட அடையாள அட்டை திரும்ப தரும்படி துணை இயக்குநர் சுப்ரமணியம், அடையாள அட்டை பெற்றவர்களிடம் கூறி, 20 நாட்கள் கடந்துவிட்டது, இன்னும் திரும்ப ஒப்படைக்கவில்லை..

  அதனால் பி.ஆர்.ஒ சயிக்முகமது.. அதிகாரிகள் எல்லாம்.. டம்மி.. அமைச்சருக்கும் மட்டுமே அதிகாரம் என்று கூறியது உண்மைதான்..

                                     

                           

 

 

Comments

comments