செய்தி துறையா- ஊழல் துறையா..ஊடக அங்கீகார அட்டை ஊழல்-ரவுடிகளுக்கு அரசு அங்கீகார அட்டை.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் தலைமைச் செயலக அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சர் செங்கோட்டையனின் நெருங்கிய உறவினரும், துணை இயக்குநருமான சுப்ரமணியம், அரசு அங்கீகார அடையாள அட்டையை கூவி, கூவி விற்பனை செய்கிறார்கள்..                

   அங்கீகாரம் தரப்படாத ஆன்லைன் சேனலுக்கு ஊடக அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு HEAD LINES MEDIA NETWORK ஆன்லைன் சேனலில் கேமிரா மேன் கார்த்திக் என்பவருக்கு ஊடக அங்கீகார அடையாள அட்டை வழங்கப்பட்டது. 2019லும் கார்த்திக்குக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது( எண்.0470)..

அங்கீகாரம் கொடுக்கப்படாத ஆன்லைன் சேனலுக்கு  அடையாள அட்டை எப்படி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தவுடன், 2019ல் கொடுக்கப்பட்ட ஊடக அங்கீகார அடையாள அட்டையை திரும்ப வாங்கிவிட்டோம் என்று செய்தித்துறை அதிகாரிகள்  பதில் சொல்லுகிறார்.  அடையாள அட்டையை வைத்து கார்த்திக், சென்னை மாநகர பேருந்து, விழுப்புரம் டிப்போ பேரூந்து பாஸ் பெற்றுள்ளார்..

 கடந்த மூன்றாண்டுகளாக ஆன் லைன் சேனலுக்கு எப்படி அடையாள அட்டை கொடுக்கப்பட்டது. எல்லா ஆன் லைன் சேனலுக்கு கொடுத்திருக்கலாமே.. என்ன கொடுக்கவில்லை.

  உதவி பி.ஆர்.ஒ, பி.ஆர்.ஒ, உதவி, துணை, கூடுதல் இயக்குநர்களுக்கு ஊடக அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டது எப்படி.. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகளுக்கு ஊடகத்துக்கு என்ன சம்பந்தம்.. ACCREDITATION கமிட்டியில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, செய்தித்துறை அதிகாரிகளுக்கு ஊடக அங்கீகார அட்டை கொடுப்பதை நிறுத்திவிட்டோம் என்று கூறியது, மினிட்டில் இடம் பெற்றுள்ளது. பிறகு எப்படி ஊடக அங்கீகார அட்டை கொடுத்தார்கள்..

 2019ம் ஆண்டு சென்னை மாநகர காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் இருக்கும் இரண்டு ரவுடிகளுக்கு (ரவுடி பினு பிறந்த நாள் விழாவில் சிக்கியவர்கள்) பிரஸ் பாஸ் புதுப்பித்து கொடுக்கப்பட்டுள்ளது..

 துணை இயக்குநர் சுப்ரமணியம், சில புரோக்கர்களை நியமித்து, ஊடக அங்கீகார அடையாள அட்டை, பிரஸ் பாஸ் விலைக்கு விற்பனை செய்து வருகிறார். இது தொடர்பான பல புகார்கள் இயக்குநர், செயலாளருக்கு குவிந்துள்ளது.  அமைச்சர் செங்கோட்டையனின் நெருங்கிய உறவினர்  என்ன செய்வது என்று உயரதிகாரிகள் புலம்புகிறார்கள்..

 செய்தித்துறையின் ஊடக அங்கீகார அட்டை ஊழல் தொடர்பாக ஆதாரங்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது…

 

 

 

Comments

comments