செய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5

 

செய்தித்துறையை மோசடி துறையாக பெயர் மாற்றம் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29.1.19 அன்று ஆன் லைன் மீடியாவை சேர்ந்த சில நிருபர்கள் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ்யை சந்தித்த போது எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் அமைச்சர்தான் என்று புலம்பினார்… சங்கர் ஐ.ஏ.எஸ் “Phony” என்பது உண்மைதான்…

மோசடி -1… நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் 24.2.18ம் தேதி வெளியிடப்பட்டது. 90 நாட்கள் கழித்துதான் ஜூன் மாதம் தான் ஊடகம் அங்கீகார அட்டை வழங்கப்படும். ஆனால் புரட்சித் தலைவி அம்மா நாளிதழ் வெளி வருவதற்கு முன்பே அதாவது ஜனவரி மாதமே சந்திரசேகர், மருது அழகுராஜ், முத்துகுமார், விஜய் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஊடகம் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. ஊடக அடையாள அட்டை எண்.. 1 முதல் 6 வரை கொடுக்கப்பட்டுள்ளது..

 மோசடி -2.. புரட்சித் தலைவி அம்மா நாளிதழின் கடைசி பக்கத்தில் ஆர்.சந்திரசேகர் Publisher என்று உள்ளது. ஆனால் ஊடகம் அங்கீகார அட்டையில்(கார்டு எண்.6) Chief of Bureau என்று உள்ளது..Chief of News Bureau என்று கேள்விபட்டு இருக்கோம்.. அது என்ன Chief of Bureau?

மோசடி -3.. சந்திரசேகர், முத்துகுமார், விஜய், மருது அழகுராஜ் உள்ளிட்ட ஆறு பேருக்கு ஊடகம் அங்கீகார அட்டை விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக ஜனவரி 2018ல் கொடுக்கப்பட்ட போது(நாளிதழில் 24.2.18ல் தான் வெளியானது) ஆர்.என்.ஐயில் ஜெயகோவிந்தன் பெயர்தான் இருந்தது..

  இப்படி செய்தித்துறையில் ஊடகம் அங்கீகார அட்டை முறைகேடாக, விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கொடுக்கப்பட்டு வருகிறது..                             தொடரும்…

 

                                

Comments

comments