செம்பாக்கம் நகராட்சி முறைகேடுகள்-சிக்கிய அதிகாரிகள் – ரூபி பில்டர்ஸ் அனுமதியும் ஆய்வு

செம்பாக்கம் பேரூராட்சி, நகராட்சியாக மாறியது முதல் நடந்த முறைகேடுகள் தொடர்பாக பல புகார்கள், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குரகத்திற்கு வந்துள்ளது. நகராட்சி ஆணையராக இருந்த ராஜேந்திரன் ஒய்வு பெறும் முன்பு, விசாரணை தொடங்கியது. ஆனால் உயரதிகாரிகளின் சிபாரிசு காரணமாக ஆணையர் ராஜேந்திரன் ஒய்வு பெற்றுவிட்டார்..

 செம்பாக்கம் நகராட்சி எல்லைக்குள் உள்ள பேரூந்து நிறுத்தங்களில் நிழற் குடை அமைப்பதில் கூட முறைகேடு நடந்துள்ளதாக தெரிகிறது. பல அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்கள்..

  ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு 10.3.2014 முதல் 28.3.14க்குள் ஐந்து நாட்களில் மட்டும் 16 அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக விஜிலென்ஸ் அதிகாரிகள் விவரங்கள் சேகரித்து வருகிறார்கள்..

 அதாவது ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ள பட்டியல் இதோ.. 10.3.2014ல் – 6 அனுமதி, 24.3.14ல் -2 அனுமதி, 26.3.14ல் -2 அனுமதி, 27.3.14ல் -2 அனுமதி, 28.3.14ல் – 4 அனுமதி.. ஐந்து நாட்களில் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்துக்கு 16 கட்டிட அனுமதி தொடர்பான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

 மேலும் ரூபி பில்டர்ஸ் நிறுவனத்தின் மீது பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதார அமைப்பின் உதவி பொறியாளர் டி.குணராஜ், சேலையூர் ஏரிக்கரையின் பின் சரிவினை ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி சேதப்படுத்தியதாக 1.9.2014ல் புகார் கொடுத்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை..

 ஜனவரி 2014 முதல் ஜனவரி 2015 வரை ஆகஸ்டு மாதம் மட்டும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 12 அடுக்குமாடி கட்டிடங்களுக்கு பின்னேற்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவது, அடுக்குமாடி கட்டிட அனுமதி உள்ளிட்ட பல முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 செம்பாக்கம் நகராட்சியின் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை முடிந்த பின்பே  முழு விவரங்கள் வெளிச்சத்துக்கு வரும்…

                                

                                         

 

 

Comments

comments