செபாஸ்டின் சஸ்பெண்ட்..மதுரை மாநகராட்சி ரூ9 கோடிஊழலில் சிக்கினார்…

நகராட்சி நிர்வாகத்தின் கூடுதல் இயக்குநராக பணியாற்றிய செபாஸ்டின், 31.5.18 அன்று ஒய்வு பெறும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. 2006-11 திமுக ஆட்சியில்  மதுரை மாநகராட்சியில்  Under Ground Drainage (UGD) system and Basic Service to the Urban Poor(BSUP) – under the JNNURM scheme at a cost of Rs 1,411 crore ஊழல் நடந்ததாக 18.7.11 & 19.7.11ம் தேதி  ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் டி.எஸ்.பி இசக்கி ஆனந்தன் தலைமையில் 30 அதிகாரிகள் குழு மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி ரெய்டு நடத்தியது. ரெய்டு நடந்த போது மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின், சென்னை நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தில் மீட்டிங் என்று 17.7.11ம் தேதி இரவு சென்னைக்கு சென்றுவிட்டார். ரெய்டின் போது, பல ஊழல் கோப்புகளை  விஜிலென்ஸ் அதிகாரிகள் எடுத்து சென்றார்கள்.. சிக்கிய கோப்புகளில் வளர்ச்சி நிதி ரூ13கோடியை வசூலிக்காததை கண்டுபிடித்து, மதுரை விஜிலென்ஸ் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தார்கள்..

 இதனை தொடர்ந்து 25.7.11ல் மதுரை மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின், மாற்றப்பட்டார். நடராசன் மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்..

  2011 மே மாதம் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது. அப்போது  உள்ளாட்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி இருந்தவரை, செபாஸ்டினை அதிகாரமிக்க பதவியை கொடுக்கவில்லை.  டம்மி பதவியில்  செபாஸ்டின் பணியாற்றினார்..

 வளர்ச்சி நிதி ரூ13 கோடி ஊழலை, விசாரணை செய்த, விஜிலென்ஸ் அதிகாரிகள் மதுரை மாநகராட்சி ஆணையராக செபாஸ்டின் பணியாற்றிய போது வளர்ச்சி நிதியில் ரூ9கோடி  அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக உறுதி செய்தார்கள்..

   மதுரை மாநகராட்சி வளர்ச்சி நிதி ஊழல்  உள்ளிட்ட பல ஊழல் வழக்குகள்  விசாரணை நடந்து வருவதால், செபாஸ்டின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்..

   மக்கள்செய்திமையம், சஸ்பெண்ட் செய்யப்பட்ட செபாஸ்டினின் ஊழல்களையும் சொத்துப்பட்டியலை தொடர்ந்து வெளியிடும்…

 

 

Comments

comments