சென்னை மெட்ரோ வாட்டர்- பொதுப்பணித்துறைகளில்- ஓய்வு பெற்றவர்களின் ஆதிக்கம்

தமிழக அரசின் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட பல துறைகளில் ஒய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு, மறு பணி நியமனம் என்ற பெயரில் 100க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்..ஒய்வு பெற்று பணி நீட்டிப்பு, மறு பணி நியமனம் பெற்றவர்களின் ஆதிக்கத்தில்தான் துறைகள் செயல்படுகிறது…

  சென்னை மெட்ரோ வாட்டரில் ஒய்வு பெற்றப்பிறகு, பணி நீட்டிப்பு பெற்று அதிகாரமையத்தில் வலம் வரும் அதிகாரிகள், ஊழியர்களின் பட்டியல்…

 1. வி.கே.சுரேஷ் – பணி மேலாளர்(ஒய்வு)
 2. ஜி.பிரபாகரன் – ஒட்டுநர்(ஒய்வு)
 3. ஏ.பாக்கியநாதன் – ஒட்டுநர்(ஒய்வு)
 4. பி.கலைசெல்வி – தாசில்தார்(ஒய்வு)
 5. ஆர்.நடராசன் – தாசில்தார்(ஒய்வு)
 6. எஸ்.கே ராஜன் – துணை ஆட்சியர்(ஒய்வு)
 7. வி.ஆர்.எல்.சிம்மன் –துணை ஆட்சியர்(ஒய்வு)
 8. ஆர்.தேவேந்திரன் – துணை ஆட்சியர் (ஒய்வு)
 9. வி.புண்ணியகோட்டி- துணை ஆட்சியர்(ஒய்வு)
 10. எம்.சுந்தரவரதன் – சார் –ஆய்வாளர்(ஒய்வு)
 11. எஸ்.ஆர்.புருசோத்தமன் – சார் –ஆய்வாளர்(ஒய்வு)

இப்படி சென்னை மெட்ரோ வாட்டரில் சார் ஆய்வாளர்களுக்கு, துணை ஆட்சியர்களுக்கு ஒய்வு பெற்றப்பின் மறு நியமனம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் அதிகாரமையத்தில் வலம் வருவார்கள்..

பொதுப்பணித்துறையில் சிறப்பு பணி அலுவலர் என்ற பெயரில் எஸ்.துரை மறு பணி நியமனம் செய்யப்பட்டு, தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகிறார்..

 இப்படி ஒய்வு பெற்றவர்களுக்கு பணி நீட்டிப்பு, மறு பணி நியமனம் செய்து, அவர்கள் மூலம் முறைகேடுகள் நடக்கிறது..அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவர்களும் இவர்களே….

  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அதிகாரமையத்தில் வலம் வரும் ஒய்வு பெற்று பணி நீட்டிப்பு பெற்றவர்கள், மறு பணி நியமனம் செய்யப்பட்டவர்களைப்பற்றி மெளனமாக இருப்பது ஏன்?

 

 

 

Comments

comments