சென்னை மெட்ரோ வாட்டர் – குடி நீர் லாரிகளுக்கு மாத வாடகை ரூ7கோடி…20 மாதங்களுக்கு ரூ136.95கோடி…

சென்னை பெருநகர் குடி நீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், சென்னை மக்களுக்கு லாரிகள் குடி நீர் வழங்கி வருகிறது. சென்னைக்கு குடி நீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது.

 சென்னைக்கு குடி நீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சூழ்நிலை வருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

 சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள லாரிகளுக்கு கொடுக்கப்பட்ட வாடகை பட்டியலை பாருங்கள்..

 1. ஏப்ரல் 2017 – ரூ690.19 இலட்சம்.
 2. மே 2017 – ரூ746.98 இலட்சம்.
 3. ஜூன் 2017 – ரூ734.79 இலட்சம்.
 4. ஜூலை 2017 – ரூ782.07இலட்சம்(ரூ7.82கோடி)
 5. ஆகஸ்டு 2017- ரூ814.83 இலட்சம்.
 6. செப்டம்பர் 2017 – ரூ779.31இலட்சம்.
 7. அக்டோபர் 2017- 780.96இலட்சம்.

                     8.நவம்பர் 2017-  ரூ532.41இலட்சம்.

 1. டிசம்பர் 2017 – 546.60இலட்சம்.
 2. ஜனவரி 2018 – ரூ581.14இலட்சம்
 3. பிப்ரவரி 2018 – ரூ521.52இலட்சம்.
 4. மார்ச் 2018 – ரூ613.78இலட்சம்.
 5. ஏப்ரல் 2018 – ரூ643.10இலட்சம்.
 6. மே 2018 –ரூ697.97இலட்சம்.
 7. ஜூன் 2018 – ரூ717.62இலட்சம்.
 8. ஜூலை 2018 – ரூ758.54இலட்சம்.
 9. ஆகஸ்டு 2018 – ரூ685.39இலட்சம்.
 10. செப்டம்பர் 2018 – ரூ731.02இலட்சம்.
 11. அக்டோபர் 2018 – ரூ757.16 இலட்சம்
 12. நவம்பர் 2018 – ரூ580.37 இலட்சம்..

 ஆக மொத்தம் 20 மாதங்களில் கொடுக்கப்பட்ட வாடகை ரூ13,695.75 இலட்சம் அதாவது ரூ136.95கோடி…

 சராசரி ஆண்டுக்கு ரூ85 கோடி குடி நீர் லாரிகளுக்கு  வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு கணக்கீட்டு பார்த்தால் ரூ850கோடி்…

  இப்படி ஆண்டுக்கு ரூ85கோடி குடி நீர் லாரிகளுக்கு வாடகை கொடுப்பதைவிட, சென்னை மக்களின் குடி நீர் தட்டுப்பாட்டை தீர்க்க, நிரந்தர திட்டம் பற்றி தமிழக அரசு ஏன் ஆலோசனை செய்யவில்லை?

                             

 

 

Comments

comments