சென்னை மாநகராட்சி -போடாத சாலைக்கு-ரூ135 கோடி பட்டுவாடா…

சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி முடங்கி போய்விட்டது.. சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பாவம் என்ன செய்வார்..

    நகராட்சி நிர்வாகத்துறையிலிருந்து 2.1.2015ல் அரசாணை எண்[எம்.எஸ்] 1ன் மூலம்

TNUDP –III under TNSUDP மூலம் ரூ2212.89கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்கு ரூ1500 கோடிக்கு ஐந்து பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரூ1500 கோடியில் ரூ135 கோடியில்  Upgradation of four Bus route roads to international standards in corporation of Chennai…ஒண்ணும் புரியவில்லையா…ரூ135 கோடியில் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் பேரூந்து செல்லும் நான்கு முக்கிய சாலைகளை உலகளவில் தரமான சாலை அமைக்கப்படும்…

 மூன்றாண்டுகளாகிவிட்டது, உலகளவில் தரமான சாலை எங்கு போடப்பட்டுள்ளது என்று  நாமும் கடந்த ஒரு மாதமாக  தேடினோம், ஆனால் கண்களில் படவில்லை.

 தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி கேட்டோம் ரூ135 கோடி பணியின் எம்.புத்தகத்தின் நகல் கேட்டோம்.

  ரூ135 கோடிக்கான உலகளவில் தரமான சாலை பணி தற்பொழுது கைவிடப்பட்டது என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

   ஆனால் TNUDP –III under TNSUDPக்கு  ரூ135 கோடி பயன்படுத்தப்பட்டுவிட்டதாக சான்றிதழ் கொடுக்கப்பட்டுவிட்டது.   போடாத சாலைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ135 கோடிக்கு பயன்படுத்தப்பட்ட சான்றிதழ் எப்படி கொடுக்க முடியும்….

 ரூ135 கோடி சென்னை மாநகராட்சி வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டதா என்று கேட்ட தகவலுக்கு இன்று பதில் கிடைக்கவில்லை..

 சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் பதில் சொல்லுவாரா?

 

Comments

comments