சென்னை மாநகராட்சி… கோவை மாநகராட்சி பாணியில்… சுகாதாரப்பிரிவில் மெகா ஊழல்…

கோவை மாநகராட்சியில்  KCP engineers pvt ltd, Varadhan infrastructure இந்த இரு நிறுவனங்களும் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக பல ஒப்பந்த பணிகளை செய்து வருகிறது.  இந்த இரு நிறுவனங்களும் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்.

  நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் தொடங்கப்பட்டது. இந்த நாளிதழில் உரிமையாளர் கம் ஆசிரியராக சந்திரசேகர்  என்று பெயர் அச்சிடப்பட்டுள்ளது. இந்த சந்திரசேகர்தான் KCP engineers pvt ltd நிறுவனத்தின் உரிமையாளர். நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் அலுவலகத்தில்  உள்ள போர்டில் Constronics india என்ற போர்டு உள்ளது. தற்போது Constronics india  KCP engineers pvt ltd என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இன்று நிறுவனங்களும் சென்னை -24 ஒரே முகவரியில் தான் செயல்படுகிறது..

  கோவை மாநகராட்சியிலிருந்து, சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த பணி, முறைகேடாக, விதிமுறைகளை மீறி  தற்போது எடுத்து வருகிறார்கள்..

 தீர்மானம் எண்.195/2018 தேதி 22.2.18ல் சென்னை மாநகராட்சிக்குட்ப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களுக்கு தேவையான 302 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு நியமனம் செய்யும் பணி, Varadhan infrastructure பிரைவேட் லிமிட் நிறுவனத்துக்கு ரூ5.69 கோடிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது…இந்த டெண்டரில் KCP engineers pvt ltd  ஆவணங்கள் அளிக்கப்படவில்லை என்று டெண்டர் நிராகரிக்கப்பட்டது.

 தீர்மானம் எண்.196/2018ல் சின்ன போரூர் மருத்துவமனை, ராயப்பேட்டை மறு வாழ்வு மையத்திற்கு சிறப்பு மருத்துவர்கள், மருத்துவ சார் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஒராண்டுக்கு நியமிக்கும் ஒப்பந்த பணி ரூ1.68 கோடிக்கு  KCP engineers pvt ltd கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்த பணிக்கான டெண்டரில் KCP engineers pvt ltd, Varadhan infrastructure, Constronics india  KCP engineers pvt ltd மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளது.. KCP engineers pvt ltd, Constronics india  KCP engineers pvt ltd ஒரே முகவரியில் செயல்படுகிறதாம்.. டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தின் படி விதி மீறல் நடந்துள்ளது..

 KCP engineers pvt ltd, Varadhan infrastructure, Constronics india  KCP engineers pvt ltd மூன்று நிறுவனங்களுக்கும் சுகாதாரப்பிரிவில் ஒப்பந்த பணிக்கு ஆட்களை அனுப்ப அனுபவமே இல்லை என்பது உண்மை..

 டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தின்  விதிமுறைகளை மீறி, ஒப்பந்த பணி கொடுத்து மெகா ஊழல் நடந்துள்ளது…

  இந்த நிறுவனங்களுக்கு ரூ14.01 கோடிக்கு  கொடுத்த அடுத்த ஒப்பந்த பணியை நாளை பார்க்கலாம்…

                                                                                               

 

Comments

comments