சென்னை மாநகராட்சி..கல்வி நிறுவனங்களின் கட்டிடங்களுக்கு … சொத்து வரியில்…மெகா பேரம்..

தமிழகம் முழுவதும் அரசு உதவி பெற்று சுய நிதி அடிப்படையில் இயங்கும் கல்வி நிறுவன கட்டிடங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படுவதில்லை. பெரு நகர சென்னை மாநகராட்சியில் 21.2.18ல் தீர்மானம் எண்.190/2018ன் படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் -1919ம் பிரிவு101[சி]யில் சட்ட திருத்தம் செய்யப்பட்டது. இதன் படி  பெரு நகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அரசு உதவி பெற்று சுய நிதி அடிப்படையில்  இயங்கும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் உள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. 2017 -18 நடப்பாண்டின் அரையாண்டு காலம் முதல் நடைமுறைக்கு வரும்..

  ஆனால் கல்வி நிறுவனங்களில் சொத்து வரி எவ்வளவு விதிப்பது பற்றி, முடிவு எடுப்பதில்  பெரிய அளவில் பேரம் நடக்கிறது… ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பல லட்சம் சதுர அடி கட்டிடங்கள் கட்டியிருக்கும், சதுர அடி கணக்கில் சொத்து வரி நிர்ணயம் செய்தால், ஒவ்வொரு கல்வி நிறுவனம் ஆண்டுக்கு பல லட்சம் சொத்து வரி கட்ட வேண்டியிருக்கும்..

 அதனால் கல்வி நிறுவனங்களின்  முதலாளிகள் மெகா பேரம் நடத்தி வருகிறார்கள்.. அதனால் இன்னும் சொத்து வரி எவ்வளவு என்று முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது…

  கல்வி நிறுவனங்களில் முதலாளிகள், பெரு நகர சென்னை மாநகராட்சியின் உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர் பதவியில் இருப்பவர்களுடன் நடக்கும்  பேரம் தொடர்பான பேச்சுவார்த்தையை மக்கள்செய்திமையம் பார்த்து வருகிறது..

 விரைவில் பேரம் நடந்தது எவ்வளவு…பண பரிமாற்றம் நடந்த தொகை எவ்வளவு என்று வீடியோ ஆதாரத்துடன் மக்கள் செய்திமையம் வெளியிடும்…

 

 

Comments

comments