சென்னை மாநகராட்சியிலும்.. KCPயின் ஊழல் ஆட்டம்….விரைவில் விசாரணை கமிசன்..

KCP engineers pvt ltd கோவை மாநகராட்சியில் தொடங்கி சென்னை மாநகராட்சியிலும்  ஊழல் ஆட்டத்தை அரங்கேற்றி வருகிறது..30.1.18 –தீர்மானம் எண்.080/2018ல் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  ரூ14.01 கோடி மதிப்பிலான 15 எண்ணிக்கையிலான பேரூந்து சாலைகளை மேம்படுத்துவதற்கான டெண்டரில்  கலந்துக்கொண்ட ஆறு நிறுவனங்களும் 31.39% முதல் 47.06% வரை அதிகமாக  விலைப்புள்ளி அளித்துள்ளார்கள்…

  ஆறு நிறுவனத்திடமும் விலைக்குறைப்பு பேரம் பேசப்பட்டதாம். அதில் KCP engineers pvt ltd 32.31% அதிகத்திலிருந்து 6.84% சதவிகிதமாக குறைத்துக்கொண்டது. அதாவது ரூ14.01 கோடி மதிப்பில் 32.31 சதவிகிதம் அதிகமாக விலைப்புள்ளி கூறியிருந்தார்கள், அதன்படி ரூ4.52 கோடி அதிகம்.. விலைக்குறைப்பு பேரத்திற்கு பிறகு ரூ95இலட்சம் அதிகம்…அதனால் இதை எல்-1ஆக முடிவு செய்து, டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது…

 தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை, நெஞ்சாலைத்துறைகளின் டெண்டர் மைனஸில் ஒப்பந்ததாரர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் சென்னை மாநகராட்சியில் மட்டும் பிளஸில் டெண்டர் எடுக்கிறார்கள்..

 உண்மையில் கே.சி.பியின் பினாமி நிறுவனமான  வரதன் இண்ப்ராஸ்ரக்சர் நிறுவனம்தான் இந்த டெண்டரில் எல்-1, இந்த நிறுவனத்தை  மட்டுமே விலைக்குறைப்பு அழைத்திருக்க வேண்டும்…கே.சி.பியை எப்படி விலைக்குறைப்புக்கு அழைத்தார்கள்… இதுதான் ஊழல்…

  சென்னை மாநகராட்சியில் சுகாதாரப்பிரிவில் தொடங்கி அனைத்து பிரிவுகளிலும் ஊழல் ஆட்டத்தை  KCP அரங்கேற்றி வருகிறது…

  கே.சி.பியின் உரிமையாளர் நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் உரிமையாளர் என்பதால், அதிகாரிள் பூம்..பூம்… மாதிரி தலையாட்டுகிறார்கள்…

      விசாரணை கமிசன் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்பதை ஊழல் அதிகாரிகளுக்கு

        நினைவுப்படுத்துகி்றோம்.

 

 

 

 

Comments

comments