சென்னை சாந்தோம் தேவலாயத்தின் பிஷப் அறையில் திருட்டு…காப்பாற்றப்பட்ட குற்றவாளி சேகர்..மோதிரம் எங்கே..

சென்னை சாந்தோம் தேவலாயத்தின் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்கள், மிகவும் நேர்மையானவர். வசதிப்படைத்தவர்கள் தனக்கு  கொடுக்கும் காணிக்கை பணத்தை, தனது அறையில் உள்ள பீரோவில் உள்ள சூட்கேஸில் வைப்பார்.. கிருத்துவ மதத்தில் உள்ள ஏழைகளின் குழந்தைகள் படிப்புக்கும், உடல் நிலை சரியில்லாமல் போனால் மருத்துவ செலவுக்கு, இந்த காணிக்கை பணத்திலிருந்து கொடுப்பார்கள்.. இதனால் பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமியை ஏழைகளின் பிஷப் என்று அன்பாக அழைப்பார்கள்…

 பிஷப் ஜார்ஜ் அந்தோணி சாமி அவர்களுக்கு செயலாளராக சேகர் என்பவர் நியமிக்கப்பட்டார். சேகர் பிஷப்புக்கு நம்பிக்கையாக பணியாற்றினார். அதனால் பீரோ சாவியை அவரிடம் கொடுத்து இருந்தார் பிஷப்..

 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், பிஷப் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ அருகில் மது அருந்தியது போல சில தடயங்கள் இருந்தது. அதிர்ச்சியான பிஷப், மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் ஐ.பி.எஸ் அவர்களிடம் புகார் செய்தார். துணை ஆணையர் தனிப்படை அமைத்தார். அந்த தனிப்படை சாந்தோம் சர்ச்சில் ஆய்வு செய்தது. பீரோவில் இருந்த பணம் ரூ10 இலட்சம்[இந்த தொகையில் மாறுதல் இருக்கலாம்..நமக்கு கிடைத்த தகவல்] காணவில்லை. புதியதாக பிஷப் பொறுப்பேற்கும் போது, அவருக்கு மோதிரம் அணிவிப்பார்கள். அந்த மோதிரமும் காணவில்லை. 

 மயிலாப்பூர் துணை ஆணையரின் தனிப்படை, ரகசிய விசாரணையில் நால்வர் சிக்கினார்கள். அதில் பிஷப்பில் செயலாளர் சேகர் மீது சந்தேகம் வர, சேகர் தனிப்பட்ட முறையில் போலீஸ் பாணியில் விசாரிக்கப்பட்டார். சேகர் உண்மையை ஒத்துக்கொண்டார்.  பல விவகாரங்களில் ரூ3 இலட்சம்  செலவு செய்தது போக, மீதி பணம் ரூ7 இலட்சம் கைப்பற்றப்பட்டது.

 ஆனால் பிஷப்புகளுக்கு அணிவிக்கப்படும், பழமை வாய்ந்த அந்த மோதிரம் இன்னும் கைப்பற்றப்படவில்லை. அந்த மோதிரம் என்னாச்சு என்ற விவரம் இது வரை தெரியவில்லை.  மோதிரம் தொடர்பாக பல முறை பிஷப் கேட்டும், காவல்துறையிடமிருந்து பதில் இல்லை என்று தெரிகிறது. 

 பிஷப், சேகர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று துணை ஆணையரை கேட்டுக்கொண்டதாகவும், அதனால் சேகர் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

சேகர், திருவள்ளூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் இயக்குநர் பொறுப்பில் இருக்கும் ஒரு அதிகாரி சேகருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த அதிகாரியின் மகன் திருமணம் ஜனவரி மாதம் 21ம் தேதி சாந்தோம் தேவலாயத்தில் நடந்தது. அந்த திருமணத்துக்கு மிகவும் உதவியர் சேகர் என்பதால் அந்த அதிகாரி, தன் அதிகாரத்தை பயன்படுத்தி  மீண்டும் சேகரை சின்னமலையில் உள்ள தேவலாயத்துக்கு மாற்றியுள்ளார்..

ந்த மோதிரம் எங்கே…என்னாச்சு..பறிமுதல் செய்யப்பட்டதா…என்ற விவரங்கள் காவல்துறையின் விளக்கம் அளிக்க வேண்டும்..

 சேகர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் . சாந்தோம் தேவலாயத்தின் பெயர் கெட்டுவிடும் என்பதற்காக, திருடியவர்களை காப்பாற்றுவது சரியல்ல..

 

Comments

comments